பாடல் #8664
நலமானது ஒன்றைக்
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: Amin
Beat: Country 2 - 4
நலமானது ஒன்றைக் கொண்டேன் அது தேவனைத் துதிப்பதே அவர் நெருக்கத்தை நீக்கியே இரட்சித்து செவி கொடுப்பார் 1.நான் கர்த்தரில் பாரத்தை வைத்தே அவர் ஆதரிப்பார் என்பேன் நம்பின தேவனால் பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான்?- நலமானது 2.நான் பரிசுத்த அலங்காரம் தரித்தே என் கர்த்தரைத் தொழுது கொள்வேன் வல்லமை மகத்துவம் ருசிப்பேன் மனுஷன் கோபம் என்ன செய்யும்?- நலமானது 3.நான் கர்த்தரின் சந்நிதி முன் வந்தே சத்தமாய் பாடி ஆராதிப்பேன் துதித்து ஸ்தோத்திரம் செலுத்துவேன் மனுஷர் கூட்டம் என்ன செய்யும்?- நலமானது 4.நான் இயேசுவில் மகிழ்ந்து நின்றே கர்த்தரை கண்ணோக்கிப் பார்ப்பேன் நம் நடுவில் இயேசுவைப் புகழ்வேன் மனுஷன் சீற்றம் என்ன செய்யும்?- நலமானது