பாடல் #8658
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: G
Beat: Jive
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவ சந்நிதியில் எழும்பும் ஸ்தோத்திரம் தேவனின் வல்லமை குணமாக்குதே வாயின் வார்த்தையும் இதயத்தின் தியானமும் தேவனுக்குப் ப்ரீதியாய் என்றும் காக்குமே 1.பரிசுத்த ஸ்தலமெங்கும் கீர்த்தியே நாணமடையா நன்மையின் மறைவிதே அதட்டிடும் கடலினை பிரித்திடும் நதியினை சேனையின் கர்த்தரே நம் கர்த்தரே- ஸ்தோத்திரம் 2.பூவியின் நடுவினில் இரட்சிப்பே பூர்வ கால இராஜனின் சிலுவையே பகைவனின் அழிவினை அளித்துமே - வெற்றியே கண்டவர் தேவனே இயேசு தேவனே- ஸ்தோத்திரம் 3.வளைந்திடும் தீவினை நீக்கியே எளியவன் நியாயத்தின் சின்னமே துதிதனை செலுத்தியே கீர்த்தனம் பாடியே மகிமையின் தேவனை உயர்த்திடுவோம்-ஸ்தோத்திரம் 4.ஞானியின் இதயத்தில் கல்வியே நாவினில் தோன்றிடும் மதுரமே காரிய சித்தியே கர்த்தரின் புகழ்ச்சியே நரம்பினில் ஓடிடும் இரத்த வேகமே- ஸ்தோத்திரம்