பாடல் #8656
என் தேவன் இயேசுவே
🔤 En Devan Yesuvae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Swing Fox
⏱️ Tempo: 185 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவன் இயேசுவே நான் எந்தன் சொந்தமாய் எந்நாளும் ஜீவித்திட தூங்காத ஒளிதனில் மறுவாழ்வு ஈந்திடுமே 1. கல்வாரி பாதையிலே நடக்கின்ற காலமிதே வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் காத்திடுமே 2. இரட்சிப்பின் பர்வதமே பெருமூச்சை அகற்றிடுதே உம் இரத்த வேகத்தினால் வெண்மையாகக் கழுவிடுமே 3. சமத்துவம் சபையினிலே சக்தியோடே பரவிடுதே எரிந்திடும் விளக்கினை தூண்டிடவே இரங்கிடுமே 4. யுத்தக்கால விமானம் போல உம் வார்த்தை எழும்பிடுதே ஆசீர்வாத மேகத்தினால் என்னை என்றும் மூடிடுமே 5. பரலோக மதகினிலே உம் வெள்ளம் பாய்ந்திடுதே இதய வீடு நிறைந்திடவே தேவ ஆவி அனுப்பிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devan Yesuvae Naan Endhan Sondhamaay Ennaalum Jeevitthida Thoongkaadha Olidhanil Maruvaazhvu Eenthitumae 1. Kalvaari Paathaiyilae Natakkindra Kaalamithae Valathupuram Idathupuram Saayaamal Kaatthitumae 2. Iratsippin Parvathamae Perumoochsai Agarrituthae Um Rattha Vaegatthinaal Venmaiyaagak Kazhuvitumae 3. Samatthuvam Sapaiyinilae Sakthiyotae Paravituthae Erinthitum Vilakkinai Thoontidavae Irangkitumae 4. Yutthakkaala Vimaanam Pola Um Vaartthai Ezhumpituthae Aaseervaadha Maegatthinaal Ennai Enrum Mootitumae 5. Paraloga Mathakinilae Um Vellam Paaynthituthae Idhaya Veetu Nirainthidavae Thaeva Aavi Anuppitumae