பாடல் #8644
நாடி வந்தேன் உம் பாதமே
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: E
Beat: Disco Party
நாடி வந்தேன் உம் பாதமே வாக்குத் தத்தம் கொடுத்தவரே 1. உற்ற உறவும் முறிந்த நேரம் உடனிருந்தவர் பகைத்த போதும் சிந்தனையில்லா ஜனத்தின் நிந்தனை நெஞ்சத்தை பிளந்த வேதனை நீக்கினீர் உம் பாதம் என்றென்றும் போற்றிடுவேன் 2. துணிந்து தூஷித்து குத்தின நேரம் அடுத்து கெடுத்து அடித்த போதும் அசுத்த ஆவியால் அலைக்கழித்து என்னை அழிக்க வந்தோனை இரட்சித்தீர் உம் நாமம் என்றென்றும் போற்றிடுவேன் 3. மனிதர் என்னை கைவிட்ட நேரம் தனித்து நின்று திகைத்த போதும் அக்கினி சோதனை சூழ்ந்து நின்றே விரட்ட நினைத்த சாத்தானை அழித்தீர் உம்மை நான் என்றென்றும் போற்றிடுவேன் 4. உன்னதம் என்னில் இறங்கின நேரம் சிலுவை காட்சியை சந்தித்த போதும் மனதின் மாயை நீங்கிய அன்றே மகிழ்ச்சி பொங்க இயேசுவே பாடினேன் இன்றும் என்றென்றும் போற்றிடுவேன்