பாடல் #8637
கெத்சமனே தோட்டத்திலே
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: F
Beat: Swing Waltz
கெத்சமனே தோட்டத்திலே தேவகுமாரன் இயேசுவே விண்வாசல் திறந்து ஜெபித்தார் ஜெபித்தார், ஜெபித்தார், ஜெபித்தாரே, ஜெபித்தார். 1. இரத்தம் துடித்து கொதித்து இதயம் நொறுங்கி ஜெபித்தார் இயேசுவின் ஜெபத்தின் ஆவி அக்கினியாய் என்னில் இறங்கி துணிந்து ஜெபிக்க ஏவிடுதே 2. பெருமூச்சு வியாகுலத்தில் பிதாவின் சித்தமே அறிந்தார் தெய்வீக ஞானத்தின் அறிவு வான் மகன் இயேசுவின் நிறைவு தெளிவாய் என்னோடே பேசிடுதே 3. தேவனின் சித்தத்திற்கு என்றும் தன்னையே முற்றும் ஒப்புவித்தார் தெய்வீக சித்தத்தின் சித்தம் ஆத்தும நேசரின் பக்கம் அன்பாலே இன்றென்னை இழுத்திடுதே 4. இரத்தத்தின் வேர்வையோடே கரைந்து முற்றும் உடைந்தார் நித்திய தயவு இரக்கம் இயேசுவின் மனதின் உருக்கம் என்றும் என்னையும் நிறைத்திடுதே