பாடல் #8627
இனிய இயேசுவைப் பாடிடுவோம்
🔤 Iniya Yesuvaip Paatituvom
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Off Beat
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனிய இயேசுவைப் பாடிடுவோம் ஆனந்தமாய் வெற்றி சிறந்திடுவோம் அன்பின் மாட்சிமை இரட்சகரே ஆயுள் காலமெல்லாம் காப்பவரே 1.கண்ணீரோடே இன்று விதைத்திடுவோம் கெம்பீரமாய் அன்று பலன் பெறுவோம் விளம்பிய வேதத்தின் வேகத்தோடே ஆகாபின் இரதத்தை முந்திடுவோம்- இனிய 2.ஏங்கிடும் மாந்தரின் குரல் கேட்போம் இடறி விழுந்தோரை தூக்கிடுவோம் பரலோக பரவச பாசத்தோடே பழிவாங்கும் பார்வோனை வீழ்த்திடுவோம்- இனிய 3.எந்நாளும் சுவிசேஷம் எங்கும் சொல்லுவோம் யூதாவின் சிங்கத்தை உயர்த்திடுவோம் எழுப்புதல் தேசத்தில் தோன்றிடவே ஏரோது மன்னனைத் தகர்த்திடுவோம்- இனிய 4.சத்திய ஊழிய வழி நடந்து உத்தம உலகத்தை உருவாக்குவோம் திருச்சபை வளர்ச்சி கண்டிடுவோம் சாத்தானை ஜெயித்து மேற்கொள்வோம்- இனிய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iniya Yesuvaip Paatituvom Aanandhamaay Verri Siranthituvom Anpin Maatsimai Iratsakarae Aayul Kaalamellaam Kaappavarae 1.kanneerotae Inru Vithaitthituvom Kempeeramaay Anru Palan Peruvom Vilampiya Vaedhatthin Vaegatthotae Aakaapin Rathatthai Munthituvom- Iniya 2.aengkitum Maandharin Kural Kaetpom Idari Vizhunthorai Thookkituvom Paraloga Paravasa Paasatthotae Pazhivaangkum Paarvonai Veezhtthituvom- Iniya 3.ennaalum Suvisaesham Engkum Solluvom Yoothaavin Singgatthai Uyartthituvom Ezhuppudhal Thaesatthil Thonridavae Aerothu Mannanaith Thakartthituvom- Iniya 4.satthiya Oozhiya Vazhi Natanthu Utthama Ulakatthai Uruvaakkuvom Thirucchapai Valarchsi Kantituvom Saatthaanai Jeyitthu Maerkolvom- Iniya