பாடல் #8605
மேன்மையான எண்ணங்களும்
🔤 Maenmaiyaana Ennanggalum
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Fox Trot
⏱️ Tempo: 180 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேன்மையான எண்ணங்களும் மகிமையான திட்டங்களும் எனக்காக என் இயேசு சிலுவையிலே தந்துவிட்டார் 1. அன்பான சுவிசேஷம் அறிவிக்கச் சென்றிடுவேன் அன்பராம் இயேசுவின் நாமம் அனல் போல பாய்ந்திடுமே கிருபையின் காலமிதே கல்வாரியை உயர்த்திடுவேன் கண்கண்ட மக்கள் உள்ளம் இரட்சிப்பில் மகிழ்ந்திடுமே 2. ஊக்கமான உபவாசம் உள்ளத்திலே கொண்டிடுவேன் உன்னதர் இயேசுவின் நாமம் உலகெல்லாம் உயர்ந்திடுமே இரட்சண்ய காலமிதே இரட்சகரை புகழ்ந்திடுவேன் காணாத ஆட்டைக் கண்டு திருச்சபை பாடிடுமே 3. வீரிய விசுவாசம் வழுவாது காத்திடுவேன் விண்ணவர் இயேசுவின் நாமம் மின்னலாக ஒளிவிடுமே வேதாகமக் காலமிதே வசனத்தைப் பேசிடுவேன் விண்ணுலகம் இறங்கிடுமே மண்ணுலகம் மறைந்திடுமே 4. பரிசுத்த ஜீவியமே எப்போதும் செய்திடுவேன் பரலோக இயேசுவின் நாமம் பாரெல்லாம் பரவிடுமே எழுப்புதல் காலமிதே இயேசுவை நோக்கிடுவேன் ஏகமாய் என்றும் எங்கும் எழும்பிடும் திருச்சபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maenmaiyaana Ennanggalum Makimaiyaana Thittanggalum Enakkaaga En Yesu Siluvaiyilae Thanthuvittaar 1. Anpaana Suvisaesham Arivikkach Senrituvaen Anbaraam Yesuvin Naamam Anal Pola Paaynthitumae Kirupaiyin Kaalamithae Kalvaariyai Uyartthituvaen Kankanda Makkal Ullam Iratsippil Makizhnthitumae 2. Ookkamaana Ubavaasam Ullatthilae Kontituvaen Unnathar Yesuvin Naamam Ulakellaam Uyarnthitumae Iratsanya Kaalamithae Iratsakarai Pugazhnthituvaen Kaanaadha Aattaik Kantu Thirucchapai Paatitumae 3. Veeriya Visuvaasam Vazhuvaathu Kaatthituvaen Vinnavar Yesuvin Naamam Minnalaaga Olivitumae Vaethaagamak Kaalamithae Vasanatthaip Paesituvaen Vinnulakam Irangkitumae Mannulakam Marainthitumae 4. Parisuttha Jeeviyamae Eppothum Seythituvaen Paraloga Yesuvin Naamam Paarellaam Paravitumae Ezhuppudhal Kaalamithae Yesuvai Nokkituvaen Aegamaay Enrum Engkum Ezhumpitum Thirucchapaiyae