பாடல் #8594
மீட்பர் உலகில் பிறந்தார்
🔤 Meetpar Ulakil Piranthaar
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Euro Trance
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீட்பர் உலகில் பிறந்தார் இயேசு என்ற நாமம் சிறந்ததே வாழ்வின் வழிகாட்டி பிறந்தார் சத்தியம், நீதி, நித்தியம் உயர்ந்ததே 1.இருள் சூழ்ந்த உலகில் ஒளியாய் உதித்தார் அருள் பொழியும் ஆவியின் மேகமாய் பிறந்தார் மருள விடாமல் மனிதனை தாங்கிட ஒளியின் விளக்காய் பிறந்தார் இயேசு (2)- மீட்பர் 2.மங்கும் திரிகளை தூண்டி எரிப்பார் நெறிந்த நாணல் பெலத்தினை அடையும் தளர்ந்த கால்கள் துதிக்கத் துடிக்கும் முறிந்த ஆவிகள் நிமிர்ந்து பாடும் (2)- மீட்பர் 3.நியாயப் பிரமாணம் நிறைவேற பிறந்தார் தீர்க்க தரிசனம் உரைத்து உதிர்த்தார் பலியைத் தடுத்து மீட்பின் பலியாய் தரணியில் பிறந்தார் இயேசு பிறந்தார் (2) - மீட்பர் 4.வாக்குத்தத்தம் வந்த வழியில் உதித்தார் வானோர் பூதலத்தோர் மகிழ்ந்திட பிறந்தார் தேவ வசனம் மறுரூபமாகி தெளிந்து ஓடும் நதியுமானார்- மீட்பர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meetpar Ulakil Piranthaar Yesu Endra Naamam Sirandhathae Vaazhvin Vazhikaatti Piranthaar Satthiyam, Neethi, Nitthiyam Uyarndhathae 1.irul Soozhndha Ulakil Oliyaay Uthitthaar Arul Pozhiyum Aaviyin Maegamaay Piranthaar Marula Vitaamal Manidhanai Thaangkida Oliyin Vilakkaay Piranthaar Yesu (2)- Meetpar 2.mangkum Thirigalai Thoonti Erippaar Nerindha Naanal Pelatthinai Ataiyum Thalarndha Kaalkal Thuthikkath Thutikkum Murindha Aavigal Nimirnthu Paatum (2)- Meetpar 3.niyaayap Piramaanam Niraivaera Piranthaar Theerkka Tharisanam Uraitthu Uthirtthaar Paliyaith Thatutthu Meetpin Paliyaay Tharaniyil Piranthaar Yesu Piranthaar (2) - Meetpar 4.vaakkutthattham Vandha Vazhiyil Uthitthaar Vaanor Poodhalatthor Makizhnthida Piranthaar Thaeva Vasanam Maruroobamaaki Thelinthu Otum Nathiyumaanaar- Meetpar