பாடல் #8589
இயேசுவின் பாதம் போற்றிடுவேன்
🔤 Yesuvin Paadham Porrituvaen
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C
🥁 Beat: Disco Samba
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் பாதம் போற்றிடுவேன் பரலோக மேன்மையைத் தேடிடுவேன் வாழ் நாளெல்லாம் துதித்திடுவேன் வழுவாது என்னை நடத்திடுவார் 1.செங்கடல் அன்று கடந்திடவே செங்கோல் பிடித்து நின்ற தேவன் செம்மை வழி இன்று நடத்திச் செல்ல செயல் வீரர் இயேசு முன் நிற்கிறார் முன் செல்வேன் நான் முன் செல்வேன் (4) 2.பாவ உலகம் எனக்குப் பின்னே பரிசுத்த இயேசு உயர்ந்த தேவன் பரத்தின் மேன்மை நன்மைகள் பொழிய பாசத்தின் இயேசு முன் நிற்கிறார் முன் செல்வேன் நான் முன் செல்வேன் (4) 3.மகிமை இயேசுவின் கண்களாலே கண்டெடுத்த ஜீவ சாட்சி நானே சிலுவையின் அன்பு பொங்கிடவே சத்திய இயேசு முன் நிற்கிறார் முன் செல்வேன் நான் முன் செல்வேன் (4) 4.தினமும் துதித்து குதித்துச் செல்வேன் இயேசுவின் மீட்பு உயர்ந்திடுமே சுவிசேஷம் சொல்லி மகிழ்ந்திடவே நித்திய இயேசு முன் நிற்கிறார் முன் செல்வேன் நான் முன் செல்வேன் (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Paadham Porrituvaen Paraloga Maenmaiyaith Thaetituvaen Vaazh Naalellaam Thuthitthituvaen Vazhuvaathu Ennai Natatthituvaar 1.senggatal Anru Katanthidavae Sengkol Pititthu Nindra Devan Semmai Vazhi Inru Natatthich Sella Seyal Veerar Yesu Mun Nirkiraar Mun Selvaen Naan Mun Selvaen (4) 2.paava Ulakam Enakkup Pinnae Parisuttha Yesu Uyarndha Devan Paratthin Maenmai Nanmaigal Pozhiya Paasatthin Yesu Mun Nirkiraar Mun Selvaen Naan Mun Selvaen (4) 3.makimai Yesuvin Kankalaalae Kantetuttha Jeeva Saatsi Naanae Siluvaiyin Anpu Pongkidavae Satthiya Yesu Mun Nirkiraar Mun Selvaen Naan Mun Selvaen (4) 4.thinamum Thuthitthu Kuthitthuch Selvaen Yesuvin Meetpu Uyarnthitumae Suvisaesham Solli Makizhnthidavae Nitthiya Yesu Mun Nirkiraar Mun Selvaen Naan Mun Selvaen (4)