பாடல் #858
இயேசுவின் கரங்களை
🔤 Yesuvin Karanggalai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான் இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் எதற்கும் பயம் இல்லையே இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4) இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன் இனிவரும் பலன் மேல் நோக்கமானேன் அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே அரவணைக்கும் இயேசு போதும் போதுமே அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம் அதிகமான கனமகிமை உண்டாக்கும் காண்கின்ற எல்லாமே அநித்தியம் காணாதவைகளோ நித்தியம் பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன் வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன் சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன் தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் கர்த்தரையே முன்வைத்து ஓடுகிறேன் கடும்புயல் வந்தாலும் அசைவதில்லை எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய் இனியும் சோர்ந்;து போவதே இல்லை ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன் அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன் கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே வேதத்தில் இன்பம் காண்கின்றேன் விரும்பி தியானம் செய்கின்றேன் வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான் வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Karanggalaip Parrik Kontaen Naan Yesuvin Karanggalaip Parrik Kontaen Edharkum Payam Illaiyae Iniyum Kavalai Enakkillaiyae Allaelooyaa (4) Yesuvukkaay Avamaanam Aerruk Kontaen Inivarum Palan Mael Nokkamaanaen Azhinthu Pokum Paaraattu Vaentaamae Aravanaikkum Yesu Pothum Pothumae Athiviraivil Neengkum Indha Ubatthiravam Athigamaana Kanamakimai Untaakkum Kaankindra Ellaamae Anitthiyam Kaanaadhavaigalo Nitthiyam Pakaivarkku Anpu Kaattituvaen Veruppavarkku Nanmai Seythituvaen Sapippavarkku Aasi Koorituvaen Thoorruvorukkaaga Jepitthituvaen Karttharaiyae Munvaitthu Otukiraen Katumpuyal Vanthaalum Asaivathillai Ethaiyum Thaangkuvaen Yesuvukkaay Iniyum Sorn;thu Povathae Illai Aatkonda Devanai Nampukiraen Avarukkul Vaer Kontu Valarukiraen Kotaikkaalam Vanthaalum Acchamillaiyae Varatsik Kaalam Vanthaalum Kavalaiyillaiyae Vaedhatthil Inbam Kaankinraen Virumpi Thiyaanam Seykinraen Vaaykkaalil Natappatta Maram Naan Vaazhkkaiyellaam Thavaraamal Kani Kotuppaen