பாடல் #8574
என்ன விந்தை என்ன அன்பு
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: F
Beat: Country Waltz
என்ன விந்தை என்ன அன்பு என் ஆத்துமா கெம்பீரித்துப் பாடுதே! 1.இம்மட்டும் காத்த நேசர் இயேசுவின் அற்புத சாட்சி கேட்டிடுவீர் ஆனந்தமாய் அன்பருக்காய் பாடிடும் பாடல் ஒன்று பாடிடுவேன்- என்ன 2.பட்சிக்கும் அக்கினி சோதனையில் பசும் பொன்னாய் விளங்கிட புடமிட்டாரே பரிசுத்தர் பாதுகாப்பை என்சொல்லுவேன் பாக்கியம் என்றே எண்ணிடுவேன்- என்ன 3.பலநாளாய் காத்துத் தவித்த உள்ளம் இந்நாளில் பொங்கிப் பூரிக்குதே பாத்திரம் நிரம்பிடும் சாட்சியை பகர்ந்திடுவேன் சபை நடுவில்- என்ன 4.என்னுள்ளந்தன்னில் ஊறிடும் ஊற்றே உண்மையாய் என் தாகம் தீர்த்திடுதே உம்மைக் காண உள்ளமெல்லாம் ஏங்கிடுதே அன்று என் ஆவல் தீர்ந்திடுமே- என்ன