பாடல் #8569
ஏழைக் கோலம் பூண்டதேனோ
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: G
Beat: Swing Waltz
ஏழைக் கோலம் பூண்டதேனோ ஏழை என்னை மீட்டிடவோ மானிட உருவில் வந்ததேனோ மாந்தரை அன்பாய் மாற்றிடவோ என் தேவனே இரட்சகரே என் பாவம் போக்க பலியானீர் 1.சிரசில் முள்முடி சூடினரோ சிந்தை என் மேல் கொண்டதாலோ குருதி வெள்ளத்தில் தொங்கினீரே குருதியால் கிரயம் கொண்டிடவோ- என் தேவனே 2.சிலுவை காட்சி கண்ட அன்று சிந்தையை உம்மிடம் ஒப்படைத்தேன் சிலுவையல்லால் இப்பாரினிலே சிந்திக்க வேறு ஒன்றுமில்லை- என் தேவனே 3.உள்ளம் என் அன்பால் பொங்கிடவே ஊழியம் செய்து மகிழ்வேனே பாரினில் என் பாவம் போக்கினீரே பாதம் பணிந்து துதிப்பேனே- என் தேவனே 4.இயேசுவின் இரத்தம் மேன்மைதானே இனிமை என்றும் பொங்கிடவே உம் பந்தியில் என்றும் பங்கு உண்டே உன்னதம் வந்து மகிழ்வேனே- என் தேவனே