பாடல் #8558
நின் நாமம் படாமல் நானில்லை
🔤 Nin Naamam Pataamal Naanillai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Traditional Waltz
⏱️ Tempo: 170 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.நின் நாமம் படாமல் நானில்லை மூவா நின் பாதமில்லாமல் ஆறுதல் இல்லை சிலுவை சுமக்க வந்தவர் நீரே சிந்தித்து உம் அன்பைப் பாடிடுவேன் துதிப்பேன் துதிப்பேன் தூயவரைப் போற்றிடுவேன் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துங்கவன் இயேசுவைத் துதிப்பேனே 2.நின் வேதமில்லாமல் வழியில்லை தேவா நின் சபையல்லால் உம் மணவாட்டி இல்லை சுய இரத்தம் சிந்தியே மீட்டவர் நீரே சுவிசேஷம் சொல்லி உம்மைப் போற்றுவேன் 3.நீரன்றி உலகில் வாழ்வில்லை நாதா நீரன்றி துணையும் உண்டோ இப்பாரில் பாவத்தைப் போக்கவே வந்தவர் நீரே பாசம் கொண்டு உம்மைப் போற்றிடுவேன் 4.நின் ஆவியின்றி வேறில்லை தேவா நீரன்றி உலகை ஜெயிப்பாருமில்லை மத்திய வானிலே வருபவர் நீரே மகிமையில் கண்டு உம்மை தரிசிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.nin Naamam Pataamal Naanillai Moovaa Nin Paadhamillaamal Aarudhal Illai Siluvai Sumakka Vandhavar Neerae Sinthitthu Um Anpaip Paatituvaen Thuthippaen Thuthippaen Thooyavaraip Porrituvaen Thuthigalin Matthiyil Vaasam Seyyum Thunggavan Yesuvaith Thuthippaenae 2.nin Vaedhamillaamal Vazhiyillai Thaevaa Nin Sapaiyallaal Um Manavaatti Illai Suya Rattham Sinthiyae Meettavar Neerae Suvisaesham Solli Ummaip Porruvaen 3.neeranri Ulakil Vaazhvillai Naathaa Neeranri Thunaiyum Unto Ippaaril Paavatthaip Pokkavae Vandhavar Neerae Paasam Kontu Ummaip Porrituvaen 4.nin Aaviyinri Vaerillai Thaevaa Neeranri Ulakai Jeyippaarumillai Matthiya Vaanilae Varubavar Neerae Makimaiyil Kantu Ummai Tharisippaen