பாடல் #8523
பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
🎙 கிறிஸ்தவ பாடல்
பயப்படாதே மகிழ்ந்து களிகூரு கர்த்தர் மாபெரும் காரியம் செய்திடுவார் (2) வனாந்திரம் செழிப்பாய் மாறிவிடும் வறண்ட உன் வாழ்வு வளமாகும் (2) வற்றாத நீரூற்று போலிருப்பாய் வல்லவர் இயேசுவால் எல்லாம் கூடும் (2) களஞ்சியம் யாவும் நிரப்பிடுமே குறைவுகள் எல்லாம் நிறைவாகும் (2) கைகளின் வேலையில் நன்மைகளும் காருண்யர் இயேசுவால் பெருகிடுமே (2) இழந்ததை மீண்டும் தந்திடுவார் இன்னல்கள் யாவையும் தீர்த்திடுவார் (2) இல்லாமை என்பது உனக்கில்லையே எல்லாமே இயேசுவால் நடந்திடுமே (2) ஆவியின் வல்லமை இறங்கிடுமே வாலிபர் தரிசனம் கண்டிடுவார் (2) தேசத்தில் எழுப்புதல் பரவிடவே தரிசனம் பெற்றோர் புறப்படுவார்(2)