பாடல் #852
இயேசுவின் அன்பு அற்புதமே
🔤 Yesuvin Anpu Arpudhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் அன்பு அற்புதமே – (3) இயேசுவின் அன்பு ஆச்சரியமே – (3) 1) ஆண்டுகள் பலவாய் ஆதரித்தார் வேண்டும் பல நன்மைகள் புரிந்தார் மீண்டும் இந்நாளில் நல் ஆசீர்பெறவே வேண்டிடுவோம் அவர் பாதம் வீழ்ந்து 2) பஞ்சம் பசியில் பாதுகாத்தார் மிஞ்சும் நோய்கள் பல தவிர்த்தார் நஞ்சுகவலையில் மூழ்காமல் நெஞ்சம் தளரா திடனளித்தார் 3) வஞ்சகன் வெஞ்சமர் புரிந்திடினும் அஞ்சாமல் வென்றிட அருகில் நின்றார் சஞ்சலங்கள் நெஞ்சில் நின்று வருத்தாமல் தஞ்சம் தந்தே எமைத் தாங்கினாரே 4) பாதைகள் நன்மையாய் அமைந்திடவே நாதனே நாள்தோறும் அருள்புரிவீர் வேகமாய் வாருமே ஆவலைத் தீருமே ஏங்கிடும் மாந்தரை சேர்த்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Anpu Arpudhamae – (3) Yesuvin Anpu Aacchariyamae – (3) 1) Aantugal Palavaay Aadharitthaar Vaentum Pala Nanmaigal Purinthaar Meentum Innaalil Nal Aaseerperavae Vaentituvom Avar Paadham Veezhnthu 2) Panjjam Pasiyil Paathukaatthaar Minjsum Noykal Pala Thavirtthaar Nanjsugavalaiyil Moozhkaamal Nenjjam Thalaraa Thidanalitthaar 3) Vanjjakan Venjjamar Purinthitinum Anjsaamal Venrida Arukil Ninraar Sanjjalanggal Nenjsil Ninru Varutthaamal Thanjjam Thanthae Emaith Thaangkinaarae 4) Paathaigal Nanmaiyaay Amainthidavae Naadhanae Naalthorum Arulpuriveer Vaegamaay Vaarumae Aavalaith Theerumae Aengkitum Maandharai Saertthitumae