பாடல் #8519
கர்த்தர் உந்தன் முன்னே போவார்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
கர்த்தர் உந்தன் முன்னே போவார் மனமே நீ கலங்காதே இறுதிவரை காத்திடுவார் மனமே நீ திகையாதே -ஓசன்னா உன்னத தேவனுக்கே - ஓசன்னா கோணலானதை செவ்வையாக்குவார் குதூகலமும் காணச் செய்வார் வேண்டியதை தந்திடுவார் வெட்கப்பட விடமாட்டார் கர்த்தர் உந்தன் முன்னே போவார் ஓசன்னா --(4) உன்னத தேவனுக்கே ஓசன்னா --(2) தடைகளெல்லாம் தகர்த்திடுவார் காரியங்கள் வாய்க்க செய்வார் தேவைகளை தந்திடுவார் குறைவுபட விடமாட்டார் உனக்கு முன்னே சென்றிடுவார் வழிகளெல்லாம் திறந்துவிடுவார் சத்துருவை வென்றிடுவார் தோற்று போக விடமாட்டார்