பாடல் #8511
மனித அன்பு மாறிப்போகும்
🔤 Manidha Anpu Maarippokum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனித அன்பு மாறிப்போகும் மாறாத அன்பு இயேசுவின் அன்பு நிலையில்லா இந்த உலகிலே நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு கானல் நீராய் கண்ணுக்கு தெரியும் கடந்து போனால் காணாமல் மறையும் பிரிந்து போகாமல் பரிந்து பேசும் பரமன் இயேசுவின் அன்பை பார் பாசம் காட்டி வேஷம் போடும் மனிதன் அன்பும் மாயை தானே ஆணிகள் ஏற்று அழகை இழந்து அன்பர் இயேசுவின் அன்பை பார் வாழத்துடிக்கும் மானிடனே சாகத் துடித்த இயேசுவைப் பார் உதிரம் சிந்தி உயிரை கொடுத்த உன்னதர் இயேசுவின் அன்பை பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidha Anpu Maarippokum Maaraadha Anpu Yesuvin Anpu Nilaiyillaa Indha Ulakilae Nilaitthirukkum Yesuvin Anpu Kaanal Neeraay Kannukku Theriyum Katanthu Ponaal Kaanaamal Maraiyum Pirinthu Pokaamal Parinthu Paesum Paraman Yesuvin Anpai Paar Paasam Kaatti Vaesham Potum Manidhan Anpum Maayai Thaanae Aanigal Aerru Azhakai Izhanthu Anbar Yesuvin Anpai Paar Vaazhatthutikkum Maanidanae Saagath Thutittha Yesuvaip Paar Uthiram Sinthi Uyirai Kotuttha Unnathar Yesuvin Anpai Paar