பாடல் #8507
கானான் பயணமோ தூரம்
🔤 Kaanaan Payanamo Thooram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கானான் பயணமோ தூரம் எகிப்தை கடந்து நாம் சென்றிடுவோம் கர்த்தர் இயேசு உடன் வருவாரே - கானானில் களிப்புடன் சேர்ந்திடுவோம் பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும் செங்கடல் எதிரே தெரிந்தாலும் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும் சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் - ஒரு சேதமின்றி நம்மை நடத்திடுவார் வனாந்திர வழியே நடத்திடுவார் வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார் வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும் வல்ல நம் கர்த்தர் உடன் வருவார் - தினம் வழுவாமல் நம்மை நடத்திடுவார் மாராவின் தண்ணீரைக் கடந்திடுவார் ஏலீம்மின் நீரூற்றைக் கண்டிடுவோம் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றும் மகிமையுள்ள கர்த்தர் உடன் வருவார் - அந்த மகிழ்ச்சியினால் நாம் கடந்திடுவோம் யோர்தானைக் கடந்து சென்றுவிடுவோம் எரிகோவைத் தகர்த்து வென்றிடுவோம் யோர்தானை பிளந்து இஸ்ரவேலை நடத்தும் யேகோவா கர்த்தர் உடன் வருவார் இன்பக் கானானில் கொண்டு சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaan Payanamo Thooram Ekipthai Katanthu Naam Senrituvom Kartthar Yesu Udan Varuvaarae - Kaanaanil Kalippudan Saernthituvom Paarvonin Saenai Pin Thodarnthaalum Senggatal Ethirae Therinthaalum Senggatalaip Pilanthu Isravaelai Natatthum Saenaigalin Kartthar Udan Varuvaar - Oru Saedhaminri Nammai Natatthituvaar Vanaanthira Vazhiyae Natatthituvaar Vaathaigal Aethuminri Kaatthituvaar Vaanatthin Mannaavaal Poshitthu Kaakkum Valla Nam Kartthar Udan Varuvaar - Thinam Vazhuvaamal Nammai Natatthituvaar Maaraavin Thanneeraik Katanthituvaar Aeleemmin Neeroorraik Kantituvom Maaraavin Thanneerai Mathuramaay Maarrum Makimaiyulla Kartthar Udan Varuvaar - Andha Makizhchsiyinaal Naam Katanthituvom Yorthaanaik Katanthu Senruvituvom Erikovaith Thakartthu Venrituvom Yorthaanai Pilanthu Isravaelai Natatthum Yaekovaa Kartthar Udan Varuvaar Inbak Kaanaanil Kontu Saertthituvaar