பாடல் #8489
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
🔤 Oru Nimidam Un Arukinil Irukka
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க வருவாயோ என் தலைவா ( 2 ) அந்த சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும் அறியாயோ என் இறைவா விழிகளை மூடி உனை நினைக்கையிலே விந்தைகள் நிகழ்வது ஏன் இறைவா ( 2 ) மொழிகளைத் தாண்டி மனம் உறவாட மகிழ்வினில் திளைப்பதும் ஏன் இறைவா சோதர மானிட அழுகுரல் கேட்க வேள்விகள் நிகழ்வதும் ஏன் இறைவா ( 2 ) வேதனைக் கண்டும் காட்டிடும் மௌனம் விளங்கவில்லை அது ஏன் இறைவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Nimidam Un Arukinil Irukka Varuvaayo En Thalaivaa ( 2 ) Andha Sirupozhuthae Oru Yugamaay Maarum Ariyaayo En Iraivaa Vizhigalai Mooti Unai Ninaikkaiyilae Vinthaigal Nigazhvathu Aen Iraivaa ( 2 ) Mozhigalaith Thaanti Manam Uravaada Makizhvinil Thilaippathum Aen Iraivaa Sodhara Maanida Azhukural Kaetka Vaelvigal Nigazhvathum Aen Iraivaa ( 2 ) Vaedhanaik Kantum Kaattitum Maunam Vilanggavillai Athu Aen Iraivaa