பாடல் #842
உம் அன்பை இன்று
🔤 Um Anpai Inru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அன்பை இன்று நாங்கள் அறிந்திருக்கிறோம், மீட்பு தரும் உம்மை இன்று மறந்திருக்கிறோம், தேவையான நேரங்களில் நாடுகின்றோம், தேவையில்லா சமயங்களில் நாம் ஓடுகின்றோம். நான் பாவி என்றாலும், என் தவறை அறிந்தாலும், என்னை உயர்த்த அன்று நீர், தாழ்ந்தீரே, இன்று நான் ஏழை என்றதால், உம் கிருபை வழங்கவே, நீர் ஏழை ஆனீரே, மறவேனோ. உம் கிருபை எப்போதும் மாறாது, உம் கிருபை எப்போதும் மறவாது, உம் கிருபை எப்போதும் தவறாது, உம் கிருபையே.. உம் கிருபை எப்போதும் மாறாது, உம் கிருபை எப்போதும் மறவாது, என்றென்றும் தொடருவது, உம் கிருபையே. பாவரோகியான என்னை மாற்றினீர், தீய வழியில் சென்ற என்னை தெரிந்தெடுத்தீர், அறியாமல் பாவங்களில் விழுந்தேன், அறிந்தும் உம் கிருபையால் என்னை சூழ்ந்துகொண்டீர், ஒரு அன்பை கண்டதும், அது உண்மை அன்பென்று, நான் நம்பி விழுந்ததும் இருக்கையில், ஆனால் உம் அன்புக்காகவே, நான் அலைந்து திரிந்தேனே, உம் அன்பு என்னோடு, இருந்ததே. .......(உம் கிருபை எப்போதும்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Anpai Inru Naanggal Arinthirukkirom, Meetpu Tharum Ummai Inru Maranthirukkirom, Thaevaiyaana Naeranggalil Naatukinrom, Thaevaiyillaa Samayanggalil Naam Otukinrom. Naan Paavi Enraalum, En Thavarai Arinthaalum, Ennai Uyarttha Anru Neer, Thaazhntheerae, Inru Naan Aezhai Endrathaal, Um Kirupai Vazhanggavae, Neer Aezhai Aaneerae, Maravaeno. Um Kirupai Eppothum Maaraathu, Um Kirupai Eppothum Maravaathu, Um Kirupai Eppothum Thavaraathu, Um Kirupaiyae.. Um Kirupai Eppothum Maaraathu, Um Kirupai Eppothum Maravaathu, Enrenrum Thodaruvathu, Um Kirupaiyae. Paavarokiyaana Ennai Maarrineer, Theeya Vazhiyil Sendra Ennai Therinthetuttheer, Ariyaamal Paavanggalil Vizhunthaen, Arinthum Um Kirupaiyaal Ennai Soozhnthukonteer, Oru Anpai Kandathum, Athu Unmai Anpenru, Naan Nampi Vizhundhathum Irukkaiyil, Aanaal Um Anpukkaagavae, Naan Alainthu Thirinthaenae, Um Anpu Ennotu, Irundhathae. .......(um Kirupai Eppothum)