பாடல் #8389
என்னோட ஆசையெல்லாம்
🔤 Ennoda Aasaiyellaam
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோட ஆசையெல்லாம் இயேசப்பா உங்க மேல தான் என்னோட பாசம் எல்லாம் என் நேசர் உங்க மேல தான் எனக்கு வேறு ஒரு ஆசையில்லே இயேசு நீங்க இருக்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே என் உசுரு உங்க உள்ளங்கையிலே பொன்னும் வெள்ளியும் தேவையில்லே மாணிக்கம் வைரங்கள் தேவையில்லை என்னை பொன்னாக மின்ன செய்யும் வேத வசனமே போதுமப்பா அதைத் தவிர மாட மாளிகையும் தேவையில்லை கூட கோபுரங்கள் தேவையில்லை இயேசுவே உமது ஆலயத்தின் வாசற்படியே போதுமப்பா உல்லாச உலகம் தேவையில்லே இந்த பொல்லாத மாமிசம் தேவையில்லே ஏமாற்றும் பிசாசு இடமேஇல்லே என்னை ஏற்றுக்கொண்ட இயேசு மட்டும் போதுமப்பா அதிகாலை ஜெபத்தை அதிகரித்து அப்பா நான் உம்மோடு உறவாடனும் அந்தி சந்தி மத்தியான வேலையிலும் அப்பா சமூகத்தில் அமர்ந்திடனும் உனக்குப் பிரியமான நல்ல மகனாக நான் மாறனும் உன் நாமம் சொல்லி சொல்லி இந்த உலகில் நான் உயிர் வாழனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennoda Aasaiyellaam Yesappaa Ungga Maela Thaan Ennoda Paasam Ellaam En Naesar Ungga Maela Thaan Enakku Vaeru Oru Aasaiyillae Yesu Neengga Irukkaiyilae Naan Ulmoochsu Vaangkaiyilae En Usuru Ungga Ullangkaiyilae Ponnum Velliyum Thaevaiyillae Maanikkam Vairanggal Thaevaiyillai Ennai Ponnaaga Minna Seyyum Vaedha Vasanamae Pothumappaa Athaith Thavira Maada Maalikaiyum Thaevaiyillai Kooda Kopuranggal Thaevaiyillai Yesuvae Umathu Aalayatthin Vaasarpatiyae Pothumappaa Ullaasa Ulakam Thaevaiyillae Indha Pollaadha Maamisam Thaevaiyillae Aemaarrum Pisaasu Idamaeillae Ennai Aerrukkonda Yesu Mattum Pothumappaa Athikaalai Jebatthai Athigaritthu Appaa Naan Ummotu Uravaadanum Anthi Santhi Matthiyaana Vaelaiyilum Appaa Samoogatthil Amarnthidanum Unakkup Piriyamaana Nalla Makanaaga Naan Maaranum Un Naamam Solli Solli Indha Ulakil Naan Uyir Vaazhanum