பாடல் #8376
மார்த்தாளே மார்த்தாளே மனமுடைந்து
🔤 Maartthaalae Maartthaalae Manamutainthu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மார்த்தாளே மார்த்தாளே மனமுடைந்து போகாதே மன்னன் இயேசு இருக்கையிலே மனதில் கவலை வைக்காதே அள்ளித் தரும் தெய்வம் உன் பக்கத்திலே வருவார் சொல்லி முடியாத பெரும் சொத்து சுகம் தருவார் உலக கவலைகளால் நீயும் புலம்ப வேண்டாமே என்னத்தை உண்போம் என்று ஓடித்திரிய வேண்டாமே மார்த்தாளே மார்த்தாளே மரியாளைப் போல நீ மாதேவன் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடு உன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்திடு பட்ட கடன் தீரலையோ பாவிமனம் ஆறலையோ பாடுபட்டு சேர்த்த பணம் கொஞ்சம் கூட மீறலையோ கையிலே காசிருந்தால் கோடி சொந்தம் தேடி வரும் பையிலே பணமிருந்தால் பாசம் உன்னைத் தேடி வரும் இயேசு உன்னில் இல்லை என்றால் எல்லாமே ஓடிவிடும் வியாதியிலே கிடக்கும்போது வேதனைகள் தீரலையோ விண்ணப்பங்கள் செய்தபோது எண்ணங்கள் நிறைவேறலையே நாளுக்கு நாள் ஆகட்டுமே நான்தான் போகட்டுமே நாதன் இயேசு வந்துவிட்டா மரித்த உயிர் வந்துவிடுமே நாளாகி போனாலும் நன்மை வந்து சேர்ந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maartthaalae Maartthaalae Manamutainthu Pokaathae Mannan Yesu Irukkaiyilae Manathil Kavalai Vaikkaathae Allith Tharum Theyvam Un Pakkatthilae Varuvaar Solli Mutiyaadha Perum Sotthu Sugam Tharuvaar Ulaka Kavalaigalaal Neeyum Pulamba Vaentaamae Ennatthai Unpom Enru Otitthiriya Vaentaamae Maartthaalae Maartthaalae Mariyaalaip Pola Nee Maadevan Yesuvin Paadhatthil Amarnthitu Unnai Vittu Etubataadha Nalla Pangkai Therinthitu Patta Katan Theeralaiyo Paavimanam Aaralaiyo Paatubattu Saerttha Panam Konjjam Kooda Meeralaiyo Kaiyilae Kaasirunthaal Koti Sondham Thaeti Varum Paiyilae Panamirunthaal Paasam Unnaith Thaeti Varum Yesu Unnil Illai Enraal Ellaamae Otivitum Viyaathiyilae Kidakkumpothu Vaedhanaigal Theeralaiyo Vinnappanggal Seythapothu Ennanggal Niraivaeralaiyae Naalukku Naal Aagattumae Naanthaan Pogattumae Naadhan Yesu Vanthuvittaa Marittha Uyir Vanthuvitumae Naalaaki Ponaalum Nanmai Vanthu Saernthitumae