பாடல் #8375
துதிக்க துதிக்க கிருபை
🔤 Thuthikka Thuthikka Kirupai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே - கூடி ஜெபிக்க ஜெபிக்க தடைகள் விலகுதே எரிகோ மதில் இடிந்து விழுந்தது செங்கடல் இரண்டாகப் பிளந்தது - அந்த யோர்தான் நதி தானாய் ஒதுங்குது இன்ப கானான் தேசம் கண்ணில் தெரியுது கஷ்டம் என்னும் கடலைக் கண்டு கலங்க வேண்டாம் துன்பம் இன்னும் புயலை கண்டு துவண்டிட வேண்டாம் கடல்மேலே நடந்து வரும் கர்த்தரை பாரு - உன் கவலையெல்லாம் ஓடி மறைஞ்சு ஒளிஞ்சிடும்பாரு பாரு கவலைப்பட்டு உம் மனது உடைஞ்சு போனதோ கண்ணீரை சிந்தி உள்ளம் நொந்து போனதோ ஒரு வழியாய் வந்த உன் துன்பங்கள் எல்லாம் நூறு வழியாய் ஓடும் பயப்பட வேண்டாம் உலகத்திலே உபத்திரவம் நமக்கு இருக்குது - ஆனா அதுக்கு பின்னே ஆசிர்வாதம் நிறைஞ்சு கிடக்குது அப்பா இயேசு உலகத்தை தான் ஜெயித்து விட்டாரே எப்போதுமே சந்தோஷமாய் இருக்க சொன்னாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikka Thuthikka Kirupai Perukuthae - Kooti Jepikka Jepikka Thataigal Vilakuthae Eriko Mathil Itinthu Vizhundhathu Senggatal Irantaagap Pilandhathu - Andha Yorthaan Nathi Thaanaay Othungkuthu Inba Kaanaan Thaesam Kannil Theriyuthu Kashtam Ennum Katalaik Kantu Kalangga Vaentaam Thunbam Innum Puyalai Kantu Thuvantida Vaentaam Katalmaelae Natanthu Varum Karttharai Paaru - Un Kavalaiyellaam Oti Marainjsu Olinjsitumpaaru Paaru Kavalaippattu Um Manathu Utainjsu Ponatho Kanneerai Sinthi Ullam Nonthu Ponatho Oru Vazhiyaay Vandha Un Thunbanggal Ellaam Nooru Vazhiyaay Otum Payappata Vaentaam Ulakatthilae Ubatthiravam Namakku Irukkuthu - Aanaa Athukku Pinnae Aasirvaadham Nirainjsu Kidakkuthu Appaa Yesu Ulakatthai Thaan Jeyitthu Vittaarae Eppothumae Santhoshamaay Irukka Sonnaarae