பாடல் #8369
எனது நெஞ்சம் அறிந்தவர்
🔤 Enathu Nenjjam Arindhavar
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனது நெஞ்சம் அறிந்தவர் யாரோ எனை மிஞ்சும் பாரங்களை புரிந்தவர் யாரோ நொந்து போனதால் எந்தன் நெஞ்சினை என் தந்தை கூட புரியவில்லையே என் தாயும் அறிந்து சொல்லவில்லையே உடைந்து போன பாத்திரம் போல என் வாழ்வு உருகுலைந்து போனது அன்று கருவில் எனக்கு உருவம் கொடுத்தவர் ஓடிவந்தார் புதிய சிருஷ்டியாக மாற்றினார் -(2) திசை மாறிய பறவையைப் போல நானும் தடுமாறி தவித்திடும் போது -(2) பறந்து காக்கும் பட்சியை போல என் இயேசு விரைந்து வந்து நடத்திச் சென்றாரே-(2) தாயின் அன்பு மாறிப்போனதால் என் வாழ்வில் சஞ்சலங்கள் பெருகி போனதே -(2) எனது நெஞ்சில் இயேசு வந்ததால் எனை மிஞ்சும் பாரம் எல்லாம் மறைந்து போனதே -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enathu Nenjjam Arindhavar Yaaro Enai Minjsum Paaranggalai Purindhavar Yaaro Nonthu Ponathaal Endhan Nenjsinai En Thanthai Kooda Puriyavillaiyae En Thaayum Arinthu Sollavillaiyae Utainthu Pona Paatthiram Pola En Vaazhvu Urukulainthu Ponathu Anru Karuvil Enakku Uruvam Kotutthavar Otivanthaar Puthiya Sirushtiyaaga Maarrinaar -(2) Thisai Maariya Paravaiyaip Pola Naanum Thatumaari Thavitthitum Pothu -(2) Paranthu Kaakkum Patsiyai Pola En Yesu Virainthu Vanthu Natatthich Senraarae-(2) Thaayin Anpu Maaripponathaal En Vaazhvil Sanjjalanggal Peruki Ponathae -(2) Enathu Nenjsil Yesu Vandhathaal Enai Minjsum Paaram Ellaam Marainthu Ponathae -(2)