பாடல் #8359
கல்வாரி மாமலை மேல்
🔤 Kalvaari Maamalai Mael
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி மாமலை மேல் கர்த்தர் இயேசு தொங்குகிறார் உன்னத பிதாமகன் உனக்காய் இரத்தம் சிந்தினார் பாவத்தைப் போக்கும் இயேசுவின் ரத்தம் பாய்ந்து ஓடடுதே சிலுவையிலே கடலை தேடி ஓடும் நதி போல் பாவியை தேடி பாய்ந்திடுதே பாவத்தை போக்கி மீட்கின்றதே உன் மரித்த இயேசுவின் இரத்தம் உன்னை பரலோகம் சேர்த்திடுமே உனக்காய் பரிந்து பேசும் இயேசு உனக்காய் குருசினில் தொங்குகிறார் உன்னை எண்ணி ஏங்குகின்றார் சாபத்தை நீக்கும் இயேசுவின் அன்பு சாவிலிருந்து உன்னை மீட்கின்றதே சத்துரு உன்னை நெருங்கிடாமல் சர்வ வல்ல தேவன் துணை இருப்பார் சிலுவை நாயகன் பெலன் கொடுப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Maamalai Mael Kartthar Yesu Thongkukiraar Unnatha Pithaamakan Unakkaay Rattham Sinthinaar Paavatthaip Pokkum Yesuvin Rattham Paaynthu Odatuthae Siluvaiyilae Katalai Thaeti Otum Nathi Pol Paaviyai Thaeti Paaynthituthae Paavatthai Pokki Meetkindrathae Un Marittha Yesuvin Rattham Unnai Paralogam Saertthitumae Unakkaay Parinthu Paesum Yesu Unakkaay Kurusinil Thongkukiraar Unnai Enni Aengkukinraar Saabatthai Neekkum Yesuvin Anpu Saavilirunthu Unnai Meetkindrathae Satthuru Unnai Nerungkitaamal Sarva Valla Devan Thunai Iruppaar Siluvai Naayakan Pelan Kotuppaar