பாடல் #8356
கும்பிடபோன தெய்வம்
🔤 Kumpidapona Theyvam
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கும்பிடபோன தெய்வம் எனக்கு குறுக்கே வந்தது - வாழ்வில் குறைவுகள் எல்லாம் தீர்த்திட என்னை தேடி வந்தது - நான் கண்ட தெய்வம் என்னைக் கைவிட்டது - நான் அறியாத இயேசு தெய்வம் என்னை தேடி வந்தது - அவரின் அருமை பெருமை சொல்லித்தான் நான் ஓடி வந்தது சாமி என்றாலே ஒரு சாமி அவர் இயேசு சாமி - நாம வாழும் இந்த பூமிக்கெல்லாம் பெரியசாமி நாயினூர் விதவை மகனின் மரண ஊர்வலம் - குறுக்கே நாதன் இயேசு நடந்து வந்த அழகு அற்புதம் நாதியற்ற விதவை அவளின் கண்ணீர் வெள்ளம் கண்டு நாதன் இயேசு மனதுருகி எழுப்பின மரித்த வாலிபனும் உயிருடன் எழுந்தான் என்ன அதிசயம் பன்னிரண்டு வருஷமாக உதிர பாடுபட்டவர் - அவள் பார்க்காத வைத்தியங்கள் பார்த்துவிட்டாள் அவளோடு வாழ்வில் இயேசு குறுக்கே வந்தார் அவளோ இயேசுவின் மேலாடையை தொட்டு சுகம் அடைந்தாள் ஆயிரம் நாக்குகளால் சொல்ல முடியுமா - அவர் அதிசயத்தை சொல்லாமல் இருக்க முடியுமா அவர் கிருபை இல்லாமல் பிழைக்க முடியுமா - உலகில் இயேசுவோடு தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா இயேசு சாமியோட தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kumpidapona Theyvam Enakku Kurukkae Vandhathu - Vaazhvil Kuraivugal Ellaam Theertthida Ennai Thaeti Vandhathu - Naan Kanda Theyvam Ennaik Kaivittathu - Naan Ariyaadha Yesu Theyvam Ennai Thaeti Vandhathu - Avarin Arumai Perumai Sollitthaan Naan Oti Vandhathu Saami Enraalae Oru Saami Avar Yesu Saami - Naama Vaazhum Indha Poomikkellaam Periyasaami Naayinoor Vidhavai Makanin Marana Oorvalam - Kurukkae Naadhan Yesu Natanthu Vandha Azhaku Arpudham Naathiyartra Vidhavai Avalin Kanneer Vellam Kantu Naadhan Yesu Manathuruki Ezhuppina Marittha Vaalibanum Uyirudan Ezhunthaan Enna Athisayam Pannirantu Varushamaaga Uthira Paatubattavar - Aval Paarkkaadha Vaitthiyanggal Paartthuvittaal Avalotu Vaazhvil Yesu Kurukkae Vanthaar Avalo Yesuvin Maelaataiyai Thottu Sugam Atainthaal Aayiram Naakkugalaal Solla Mutiyumaa - Avar Athisayatthai Sollaamal Irukka Mutiyumaa Avar Kirupai Illaamal Pizhaikka Mutiyumaa - Ulakil Yesuvotu Thayavu Illaamal Nilaikka Mutiyumaa Yesu Saamiyoda Thayavu Illaamal Nilaikka Mutiyumaa