பாடல் #835
புதிய பாடல் தந்தார்
🔤 Puthiya Paadal Thanthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய பாடல் தந்தார் நித்தம் அவரைத் துதித்திடவே காலையில் கூவிடும் பறவைகளும் மாலையில் கூப்பிடும் விலங்குகளும் இன்பமாய் இயேசுவைத் துதிக்கின்றன என்னையும் துதித்திட அழைக்கின்றன மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும் பாறையில் மோதிடும் கடலலையும் துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன என்னையும் துதித்திட அழைக்கின்றன காகங்கள் கரைந்திடும் குரலைக் கேட்டு படைத்தவர் மகிழ்ந்திடும் வேளையிலே பாவி என் பாடலின் துதிகேட்டு என் தேவன் களித்திட மகிழுவேன் நான் உள்ளத்தில் பாவங்கள் இருக்கும்வரை உண்மையாய் துதித்திட முடியவில்லை கல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன் இன்பமாய் இயேசுவைத் துதித்து வாழ்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Paadal Thanthaar Nittham Avaraith Thuthitthidavae Kaalaiyil Koovitum Paravaigalum Maalaiyil Kooppitum Vilangkugalum Inbamaay Yesuvaith Thuthikkindrana Ennaiyum Thuthitthida Azhaikkindrana Maranggalil Mothitum Thendral Kaarrum Paaraiyil Mothitum Katalalaiyum Thulliyae Kalippudan Thuthikkindrana Ennaiyum Thuthitthida Azhaikkindrana Kaaganggal Karainthitum Kuralaik Kaettu Pataitthavar Makizhnthitum Vaelaiyilae Paavi En Paadalin Thuthikaettu En Devan Kalitthida Makizhuvaen Naan Ullatthil Paavanggal Irukkumvarai Unmaiyaay Thuthitthida Mutiyavillai Kalvaari Ratthatthaal Kazhuvap Perraen Inbamaay Yesuvaith Thuthitthu Vaazhvaen