பாடல் #8343
இறைவா உந்தன் மாளிகை
🔤 Iraivaa Undhan Maalikai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவா உந்தன் மாளிகை வாசலிலே இந்த ஏழை இந்த ஏழை பாடும் கூக்குரல் கேட்கலையோ நெஞ்சமெல்லாம் நீர்தான் இயேசப்பா என் நினைவெல்லாமே நீர்தான் இயேசப்பா நீர் வர வேண்டும் வரம் தரவேண்டும் உன்னை நான் அழைக்கின்றேன் நான் தஞ்சமென்று உம்மை தானே நம்பி இருக்கிறேன் பேசும் தெய்வம் நீரே என்னுடன் பேச வேண்டும் நீரே கேட்கும் வரங்களெல்லாம் தந்திடும் இயேசு சாமி நீரே உம்முடைய இரத்தத்தினால் என்னை கழுவினீர் உம் சிலுவை காயங்களால் சுகமாய் ஆக்கினீர் உம்முடைய வார்த்தையினால் என்னை தேற்றினீர் உனக்கொருவர் இருக்கின்றாரென்று நம்பிக்கை ஊட்டினீர் நான் பாவியென்று என்னை தள்ளாமல் கொண்ட பாசம் கொஞ்சமா யார் எதை சொன்னாலும் செய்தாலும் என் நெஞ்சமே அஞ்சுமா நயவஞ்சக சாத்தான் உம்மிடமிருந்து என்னை பிரிக்குமா நீரிலுள்ள மீன் இனங்கள் நிலத்தில் நீந்துமா நிலத்தில் ஓடும் மான்கள் எல்லாம் நீரில் வாழுமா இயேசு என்னும் தெய்வமின்றி இரட்சிப்பு கிடைக்குமா அவர் கிருபை இல்லாமல் உயிர் வாழ முடியுமா என்னை ஆட்கொண்ட தெய்வம் அதிசயமே என்றும் என்னை தாங்குமே கண்ணை இமை காப்பது போல் காத்திடும் என்னை தூக்கி நிறுத்துமே இந்த பூமியில் ஜீவனுள்ள வரை எந்தன் நெஞ்சம் பாடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivaa Undhan Maalikai Vaasalilae Indha Aezhai Indha Aezhai Paatum Kookkural Kaetkalaiyo Nenjjamellaam Neerthaan Yesappaa En Ninaivellaamae Neerthaan Yesappaa Neer Vara Vaentum Varam Tharavaentum Unnai Naan Azhaikkinraen Naan Thanjjamenru Ummai Thaanae Nampi Irukkiraen Paesum Theyvam Neerae Ennudan Paesa Vaentum Neerae Kaetkum Varanggalellaam Thanthitum Yesu Saami Neerae Ummutaiya Ratthatthinaal Ennai Kazhuvineer Um Siluvai Kaayanggalaal Sugamaay Aakkineer Ummutaiya Vaartthaiyinaal Ennai Thaerrineer Unakkoruvar Irukkinraarenru Nampikkai Oottineer Naan Paaviyenru Ennai Thallaamal Konda Paasam Konjjamaa Yaar Ethai Sonnaalum Seythaalum En Nenjjamae Anjsumaa Nayavanjjaka Saatthaan Ummidamirunthu Ennai Pirikkumaa Neerilulla Meen Inanggal Nilatthil Neenthumaa Nilatthil Otum Maankal Ellaam Neeril Vaazhumaa Yesu Ennum Theyvaminri Iratsippu Kitaikkumaa Avar Kirupai Illaamal Uyir Vaazha Mutiyumaa Ennai Aatkonda Theyvam Athisayamae Enrum Ennai Thaangkumae Kannai Imai Kaappathu Pol Kaatthitum Ennai Thookki Nirutthumae Indha Poomiyil Jeevanulla Varai Endhan Nenjjam Paatumae