பாடல் #832
துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே
🔤 Thuthitthituvom Thooyavar Yesuvaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே புதிய ஜீவனால் எம்மை புதுமையாய் மாற்றி திருச்சித்தம் செய்திடவே - உம் மகிமையின் ஆவியால் நிறைந்தே மகிழ மாதயவந்திடுமே கடும் புயல்களிலே கலங்கிடாதேம்மை காத்திடும் கர்த்தரவர் திரு கரங்களை நீட்டி மறைவிடம் ஈந்து மனமதை தேற்றினாரே சுத்தர்களுடனே சீர் பொருந்திடவே நித்தமும் கிருபை ஈந்தார் - தம் ஜீவனை ஈந்து சாவினை ஜெயித்து சேயராய் மாற்றினாரே . சிலுவை சுமந்தவர் பின் சென்றிடுவோம் சேவையும் செய்திடவே - உயர் பெலமதை யீந்து பயமதை நீக்கி பறந்திடக் கிருபை செய்வார் அவர் வரும் வேளையை அனுதினம் நோக்கி ஆயத்தமாகிடுவோம் - எம்மை அழைத்தவரே கரம் பிடித்தவரே என்றும் அன்புடன் நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthituvom Thooyavar Yesuvaiyae Puthiya Jeevanaal Emmai Puthumaiyaay Maarri Thiruchsittham Seythidavae - Um Makimaiyin Aaviyaal Nirainthae Makizha Maadhayavanthitumae Katum Puyalkalilae Kalangkitaathaemmai Kaatthitum Karttharavar Thiru Karanggalai Neetti Maraividam Eenthu Manamathai Thaerrinaarae Suttharkaludanae Seer Porunthidavae Nitthamum Kirupai Eenthaar - Tham Jeevanai Eenthu Saavinai Jeyitthu Saeyaraay Maarrinaarae . Siluvai Sumandhavar Pin Senrituvom Saevaiyum Seythidavae - Uyar Pelamathai Yeenthu Payamathai Neekki Paranthidak Kirupai Seyvaar Avar Varum Vaelaiyai Anuthinam Nokki Aayatthamaakituvom - Emmai Azhaitthavarae Karam Pititthavarae Enrum Anpudan Natatthitumae