பாடல் #8315
வானம் இருட்டிடுச்சு நிலவும்
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
வானம் இருட்டிடுச்சு நிலவும் வெளிச்சிடுச்சு ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி-(2) நட்சத்திர மண்டலமும் பூக்கள் தொடுத்திருச்சி -(2) நடுவானம் வெள்ளி மின்ன நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சு எல்லாரும் வாங்கடியோவ் ஆடி பாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான் இயேசு என்று சொல்லலாம் குத்தடி குத்தடி ஷீலக்கா குனிஞ்சு குத்தடி ரெபேக்கா நம்ம ஊரு தெய்வம் தான் இயேசன்னு சொல்லக்கா ஒய்யாரே அல்லேலுயா ஒய்யா -(2) நம்ம ஊரு தெய்வம் தான் இயேசு ராஜா தான் அவர் நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு -(2) நம்ம தெரு வழியா கழுதை மேல பவனி வராறு -(2) நம்ம ஊரு மக்க ஓசன்னா சொல்லி பாடுது -(3) மாரி காலம் முடிஞ்சது மழையும் ஓய்ந்தது நம்ம ஊருக்குள்ள மண்வாசனை முகத்தில் அடிக்குது -(2) நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம் வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம இயேசு ராஜா வந்தாலே ஊரேல்லாமே கொண்டாட்டம் -(4) செத்தவனை உயிரோடு எழுப்புவாருங்க - அவனை பெத்தவனை சந்தோஷபடுத்துவாருங்க -(2) வார்த்த நீரை ரசமாக மாற்றுவாருங்க -(2) நோக்கி பார்த்தவரின் கஷ்டங்களை நீக்குவாருங்க-(3)