பாடல் #8283
கடக்க முடியாத நதியே
🔤 Katakka Mutiyaadha Nathiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடக்க முடியாத நதியே அடக்க முடியாத அலையே உடைக்க முடியாத உறவே உடைக்கப்படுதே என் சுயமே நிறைந்து வழியும் என் அகமே நினைவு முழுதும் உம் முகமே என் கட்டுப்பாட்டின் எல்லைக் கோட்டை கடந்து விட்டேன் கர்த்தரின் ஆவியினால் என் இஷ்டப்படி ஏதும் செய்ய இயலவில்லை கர்த்தரின் வசமானேன் என் கால்களும் மண்ணோடு இல்லாமல் விலக சிந்தையும் உலகத்தை வெறுப்புடன் உதர கர்த்தரின் ஆவிக்குள் நான் மாறினேன் நிச்சயம் ஆழத்தில் நான் மூழ்கினேன் கனுக்கால் அளவு போதவில்லை கதறி நான் ஜெபித்தேன் முழங்கால் அளவிலும் திருப்தி இல்லை முழங்கால் முடக்கி நின்றேன் புரண்டிடும் நதியினில் விடைதனை அடைந்தேன் திரண்டிடும் நேசத்தால் உலகினை மறந்தேன் சின்ன வட்டங்களை விட்டு வெளியேறினேன் அன்பின் பிதா திட்டங்களில் அனலாகினேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katakka Mutiyaadha Nathiyae Adakka Mutiyaadha Alaiyae Utaikka Mutiyaadha Uravae Utaikkappatuthae En Suyamae Nirainthu Vazhiyum En Agamae Ninaivu Muzhuthum Um Mugamae En Kattuppaattin Ellaik Kottai Katanthu Vittaen Karttharin Aaviyinaal En Ishtappati Aethum Seyya Iyalavillai Karttharin Vasamaanaen En Kaalkalum Mannotu Illaamal Vilaka Sinthaiyum Ulakatthai Veruppudan Udhara Karttharin Aavikkul Naan Maarinaen Nicchayam Aazhatthil Naan Moozhkinaen Kanukkaal Alavu Podhavillai Kathari Naan Jepitthaen Muzhangkaal Alavilum Thirupthi Illai Muzhangkaal Mudakki Ninraen Purantitum Nathiyinil Vitaidhanai Atainthaen Thirantitum Naesatthaal Ulakinai Maranthaen Sinna Vattanggalai Vittu Veliyaerinaen Anpin Pithaa Thittanggalil Analaakinaen