பாடல் #8253
இறைவன் நமது
🔤 Iraivan Namathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை குறைகள் தீரும் கவலைகள் மாறும் குழம்பிய மனதில் அமைதி வந்தேறும் 1. பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்இல்லை பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை மறந்து விடாமல் அவைகளுக்குணவு – 2 வாரி வழங்கி – பேணியே காக்கும் (3) 2. வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள் வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் – 2 மன்னனும் என்றும் – உடுத்தியதில்லை (3) 3. எதனை உண்போம் எதனை உடுப்போம் எதனைக் குடிப்போம் எனத் திகைக்காதே முதலில் பரமனின் அரசின் நீதியை – 2 முனைந்து தேடிடு – சித்திக்கும் அனைத்தும் (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivan Namathu Vaanakath Thanthai Ithai Unarnthaalae Kulirnthitum Sinthai Kuraigal Theerum Kavalaigal Maarum Kuzhampiya Manathil Amaithi Vanthaerum 1. Paravaigal Vithaippathum Aruppathumillai Patthirappatutthi Vaippathumillai Maranthu Vitaamal Avaigalukkunavu – 2 Vaari Vazhangki – Paeniyae Kaakkum (3) 2. Vayalveli Malarkalaip Paareer Avaigal Varunthi Uzhaippathum Noorpathumillai Mayangkida Vaikkum Ivaipol Saalamon – 2 Mannanum Enrum – Ututthiyathillai (3) 3. Edhanai Unpom Edhanai Utuppom Edhanaik Kutippom Enath Thikaikkaathae Mudhalil Paramanin Arasin Neethiyai – 2 Munainthu Thaetitu – Sitthikkum Anaitthum (3)