பாடல் #8252
கர்த்தர் என் மேய்ப்பராய்
🔤 Kartthar En Maeypparaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் (4) 1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் குளிர் நீரோடும் ஊற்றினிலே என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார் அவர் காட்டிய வழி செல்வேன் 2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம் அவர் அன்பின் வழி வளர்ப்பார் மரண இருள் மூடிடும் வேளை இயேசுவே என்னோடிருப்பார் 3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே ஒரு பந்தியை ஏற்படுத்தி சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி அபிஷேகம் செய்திடுவார் 4. எந்தன் ஜீவிய காலம் எல்லாம் அவர் கிருபை வரம் பெறுவேன் எந்தன் கர்த்தரின் வானக வீட்டில் என்றென்றும் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Maeypparaay Irukkinraar Thaazhvataiyaen (4) 1. Avar Pullulla Idanggalil Maeyppaar Kulir Neerotum Oorrinilae Ennai Koottich Selvaar Angku Saerppaar Avar Kaattiya Vazhi Selvaen 2. Endhan Aatthumam Nirainthitum Vannam Avar Anpin Vazhi Valarppaar Marana Irul Mootitum Vaelai Yesuvae Ennotiruppaar 3. Endhan Pakaivarkal Kankalin Munnae Oru Panthiyai Aerpatutthi Suga Thailanggal Kontennai Thaerri Apishaegam Seythituvaar 4. Endhan Jeeviya Kaalam Ellaam Avar Kirupai Varam Peruvaen Endhan Karttharin Vaanaka Veettil Enrenrum Vaazhnthituvaen