பாடல் #8237
உம்மை மறவேன் என் இயேசுவே
🔤 Ummai Maravaen En Yesuvae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை மறவேன் என் இயேசுவே உம்மை தொழுவேன் எந்நாளிலுமே - 2 உம்மை நான் நினைப்பேன் ஒவ்வொரு நாளும் துதிப்பேன் என் தெய்வமே - 2 உம்மை மறவேன் உம்மை மறவேன் உம்மை மறவேன் என் இயேசுவே தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை தந்தை என்னை வெறுத்த போதும் நீர் என்னை வெறுப்பதில்லை - 2 தாய் போல தேற்றி தந்தையைப் போல் அணைத்தீர் - 2 மார்மீது என்னை சாய்த்து மகிழும் நல்ல மேய்ப்பனே - 2 கவலை கண்ணீரோடு நான் கலங்கி நின்றபோது கர்த்தா உம் கரம் என்னை தேற்றி நடத்தி சென்றதே - 2 கலங்காதே என்று கண்ணீரை துடைத்தீர் திகையாதே என்று என்றும் என்னோடு இருந்தீர் நீரே என் தேவன் என்றும் எனக்குள் வாழும் ஜீவன் - 2 கண்ணின் மணிபோல என்னை தினம் காப்பவரே காலங்களெல்லாம் உடனிருந்து என்னை நடத்தினீரே - 2 இம்மட்டும் காத்த என் தேவன் நீரே இனிமேலும் காக்கும் இம்மானுவேலே உம்மை போல் தெய்வமில்லை உலகில் நானும் சொல்ல - 2 உம்மை மறவேன் உம்மை மறவேன் உம்மை மறவேன் என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Maravaen En Yesuvae Ummai Thozhuvaen Ennaalilumae - 2 Ummai Naan Ninaippaen Ovvoru Naalum Thuthippaen En Theyvamae - 2 Ummai Maravaen Ummai Maravaen Ummai Maravaen En Yesuvae Thaay Ennai Maranthaalum Neer Ennai Marappathillai Thanthai Ennai Veruttha Pothum Neer Ennai Veruppathillai - 2 Thaay Pola Thaerri Thanthaiyaip Pol Anaittheer - 2 Maarmeethu Ennai Saaytthu Makizhum Nalla Maeyppanae - 2 Kavalai Kanneerotu Naan Kalangki Nindrapothu Kartthaa Um Karam Ennai Thaerri Natatthi Sendrathae - 2 Kalangkaathae Enru Kanneerai Thutaittheer Thikaiyaathae Enru Enrum Ennotu Iruntheer Neerae En Devan Enrum Enakkul Vaazhum Jeevan - 2 Kannin Manipola Ennai Thinam Kaappavarae Kaalanggalellaam Udanirunthu Ennai Natatthineerae - 2 Immattum Kaattha En Devan Neerae Inimaelum Kaakkum Immaanuvaelae Ummai Pol Theyvamillai Ulakil Naanum Solla - 2 Ummai Maravaen Ummai Maravaen Ummai Maravaen En Yesuvae