பாடல் #82
அனந்த கோடி கூட்டத்தார்
🔤 Anandha Koti Koottatthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அனந்த கோடி கூட்டத்தார் ஆனந்த கீதம் பாடியே, பண் இசைப்பார் வெண் உடையார் தெய்வாசனம் முன்னே. விண்வேந்தர் தயை போக்கிற்றே மண் மாந்தர் பாவம் நோவுமே; மேலோகிலே நீர் நோக்குவீர் உம் நாதர் மாட்சியே. பாடற்ற பக்தர் சேனையே, கேடோய்ந்து தூதரோடுமே பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம் தம் வார்த்தை நல்குவார். 2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில், கோதற்ற வெண்மை அணிந்தீர்; உம் நீதிக்காய் நம் நாதரே பொற் கிரீடம் சூட்டுவார்; பூலோக வாழ்வின் கண்ணீரை மேலோகில் ஸ்வாமி நீக்கினார்; போம் திகிலும்; உம் மீட்பரின் நல் மார்பில் சாய்குசீர் விண் வீட்டினில் மா பந்தியை மாண் வேந்தரோடு அடைந்தீர்; நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே கர்த்தாவோடென்றுமே. 3. ஆ, வீரர் சூரர் சேனையே, மா தீரச் செய்கை ஆற்றினீர், நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர் நீர் வாழ்க, பக்தரே! மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர், விண் வேந்தரோடும் சிலுவை நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர் உம் கண்ணீர் பலனே. மெய் மணவாட்டி, போற்றுவாய்! வையகமே முழங்குவாய்! எம் ஸ்வாமியே, என்றென்றுமே உம் ஸ்தோத்ரம் ஏறுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anandha Koti Koottatthaar Aanandha Keedham Paatiyae, Pan Isaippaar Ven Utaiyaar Theyvaasanam Munnae. Vinvaendhar Thayai Pokkirrae Man Maandhar Paavam Novumae; Maelokilae Neer Nokkuveer Um Naadhar Maatsiyae. Paadartra Pakthar Saenaiyae, Kaetoynthu Thoodharotumae Pan Meettuveer; Vin Naadharthaam Tham Vaartthai Nalkuvaar. 2. Maa Thaazhvaay Vaazhntheer Paarinil, Kodhartra Venmai Anintheer; Um Neethikkaay Nam Naadharae Por Kireedam Soottuvaar; Poologa Vaazhvin Kanneerai Maelokil Svaami Neekkinaar; Pom Thikilum; Um Meetparin Nal Maarpil Saaykuseer Vin Veettinil Maa Panthiyai Maan Vaendharotu Ataintheer; Neer Perreerae Paer Vaazhvumae Kartthaavotenrumae. 3. Aa, Veerar Soorar Saenaiyae, Maa Theerach Seykai Aarrineer, Neer Sakittheer, Neer Jeyittheer Neer Vaazhka, Paktharae! Man Maandhar Keertthi Igazhntheer, Vin Vaendharotum Siluvai Neer Sumantheer, Neer Aruppeer Um Kanneer Palanae. Mey Manavaatti, Porruvaay! Vaiyakamae Muzhangkuvaay! Em Svaamiyae, Enrenrumae Um Sthothram Aerumae.