பாடல் #8189
நீங்கதாம்பா பார்த்துக்
🔤 Neenggathaampaa Paartthuk
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்கதாம்பா பார்த்துக் கொள்ளணும்
என்னால் ஒன்றும் முடியாதப்பா
என் பாரங்களை உம் மேலே சுமத்துகிறேன்
ஒரே ஒரு பார்வை வேண்டும் கெஞ்சுகிறேன்
1. வழி நடந்து போகையில் வழி எதுவோ திகைக்கையில்
முன் செல்லும் நல்ல நேசரே
தடுமாறும் வேளையில் தனிமை சூழும் நேரத்தில்
தாங்கி கொள்ளும் எந்தன் நேசரே (இயேசுவே )
2.கதறி அழும் வேளையில் கண்ணீர் விடும் நேரத்தில்
கரங்களாலே அணைத்து கொள்ளுமே
காயங்களை ஆற்றியே என் உள்ளம் தேற்றியே
கைவிடாமல் தூக்கி செல்லுமே
(இயேசுவே -4)
3.மாறிவிடும் உலகினில் மனிதர்களும் பகைக்கையில்
மார்பினிலே சாய்ந்து கொள்ளுவேன்
பாரங்கள் பெருகையில் மனமுடைந்து போகையில்
உம் பாதத்திலே விழுந்து கிடப்பேன்
(இயேசுவே - 4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neenggathaampaa Paartthuk Kollanum
Ennaal Onrum Mutiyaadhappaa
En Paaranggalai Um Maelae Sumatthukiraen
Orae Oru Paarvai Vaentum Kenjsukiraen
1. Vazhi Natanthu Pokaiyil Vazhi Ethuvo Thikaikkaiyil
Mun Sellum Nalla Naesarae
Thatumaarum Vaelaiyil Thanimai Soozhum Naeratthil
Thaangki Kollum Endhan Naesarae (yesuvae )
2.kathari Azhum Vaelaiyil Kanneer Vitum Naeratthil
Karanggalaalae Anaitthu Kollumae
Kaayanggalai Aarriyae En Ullam Thaerriyae
Kaivitaamal Thookki Sellumae
(yesuvae -4)
3.maarivitum Ulakinil Manidharkalum Pakaikkaiyil
Maarpinilae Saaynthu Kolluvaen
Paaranggal Perukaiyil Manamutainthu Pokaiyil
Um Paadhatthilae Vizhunthu Kidappaen
(yesuvae - 4)