பாடல் #8170
இப்போது நேச நாதா
🔤 Ippothu Naesa Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம் நீர் தாங்கி, மனதார மரித்தீர்; உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும் அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர். 3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து, மரண அவஸ்தை உண்டாகையில், தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து, ஒளி உண்டாக்கும் அச்சராவினில். 4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்; என் தலையை உம் மார்பில் அணைத்தே என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்; அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ippothu, Naesa Naathaa, Thalai Saaytthu Thelindha Arivotu Aaviyai Oppuvittheer Pithaavin Karameethu Pongku Nenjjam Mooccharrotungkirrae. 2. Saamattum Saandhamaay En Thukkap Paaram Neer Thaangki, Manathaara Marittheer; Um Saavil Pelan Urrae, Aaviyaiyum Amaidhalaayth Thanthaik Koppuvittheer. 3. Nal Meetparae, Saavirul Ennaich Soozhnthu, Marana Avasthai Untaakaiyil, Thoyyum Aaviyil Samaathaanam Eenthu, Oli Untaakkum Accharaavinil. 4. Naan Maalumpothum Siluvaiyaik Kaattum; En Thalaiyai Um Maarpil Anaitthae En Katai Moochsai Anpaay Aerrukkollum; Appaal Um Nitthiya Oyvu Ennathae.