பாடல் #817
இயேசு பாலனாய் பிறந்தார் இயேசு தேவனே
🔤 Yesu Paalanaay Piranthaar Yesu Devanae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பாலனாய் பிறந்தார் இயேசு தேவனே பெத்லகேமிலே ஏழைக் கோலமாய் முன்னணை புல்லணை மீதிலே பிறந்தார் 1. உன்னதத்தில் தேவ மகிமை பூமியிலே சமாதானமும் மானிடரில் பிரியம் உண்டாவதாக என்று தேவ தூதர் பாடிட – இயேசு 2. விண்ணை வெறுத்த இம்மானுவேல் விந்தை மானிடவதாரமாய்த் தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர் தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு 3. ஓடி அலைந்திடும் பாவியைத் தேடி அழைக்கும் இப்பாலகன் பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர் பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு 4. கைகள் கட்டின தேவாலயம் கர்த்தர் தங்கும் இடமாகுமோ நம் இதயமதில் இயேசு பிறந்திட நம்மை அளித்திடுவோம் வாரும்- இயேசு 5. அன்பின் சொரூபி இப்பாலனே அண்டி வருவோரின் தஞ்சமே ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும் ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Paalanaay Piranthaar Yesu Devanae Pethlakaemilae Aezhaik Kolamaay Munnanai Pullanai Meethilae Piranthaar 1. Unnathatthil Thaeva Makimai Poomiyilae Samaathaanamum Maanidaril Piriyam Untaavathaaga Enru Thaeva Thoodhar Paatida – Yesu 2. Vinnai Veruttha Immaanuvael Vinthai Maanidavathaaramaayth Thannaip Paliyaagath Thandha Oli Ivar Thammai Paninthituvom Vaarum – Yesu 3. Oti Alainthitum Paaviyaith Thaeti Azhaikkum Ippaalakan Paavanggalin Naasar Paavigalin Naesar Paadham Paninthituvom Vaarum – Yesu 4. Kaigal Kattina Thaevaalayam Kartthar Thangkum Idamaakumo Nam Idhayamathil Yesu Piranthida Nammai Alitthituvom Vaarum- Yesu 5. Anpin Soroopi Ippaalanae Anti Varuvorin Thanjjamae Aarudhal Alitthu Allal Agarritum Aandavarai Panivom Vaarum – Yesu