பாடல் #8169
உம் சார்பினில் நடத்தும்
🔤 Um Saarpinil Natatthum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி தவறுவோமே, சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்; மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும். 2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி கேடு சூழுமே; வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும், சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும். 3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி வழி காணோமே; கார்மேகம் மூடி இருள் சூழுவோம், உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம். 4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே; காடு மேடான பாதை என்றுமே, உம் சித்தம்போலே துன்பம் இன்பமும் தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Um Saarpinil Natatthum, Thanthaiyae; Um Thunaiyinri Thavaruvomae, Santhaegam Soozhum, Thukkam Minjsitum; Mey Vazhi Kiristhumoolam Natatthum. 2. Satthiyatthil Natatthum, Thanthaiyae; Um Thunaiyinri Kaetu Soozhumae; Vaanaal Sirrinba Maaykaiyaal Ketum, Sarrum Nampikkaiyarrae Vaatitum. 3. Sanmaarkkatthil Natatthum, Thanthaiyae; Um Thunaiyinri Vazhi Kaanomae; Kaarmaegam Mooti Irul Soozhuvom, Ummaalae Saedhaminrich Selluvom. 4. Vin Oyvukku Natatthum, Thanthaiyae; Kaatu Maetaana Paathai Enrumae, Um Sitthampolae Thunbam Inbamum Thandhatiyaarai Vaanor Aakkitum.