பாடல் #8168
கீழ் வான கோடியின்
🔤 Keezh Vaana Kotiyin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கீழ் வான கோடியின் செம் காந்தி சூரியன் எழும்பிடும்: அடியார் ஆன்மத்தின் நீதியின் சூரியன் ஆரோக்கியம் சீருடன் எழும்பிடும். 2. ராவிருள் நீங்கிற்றே காந்தியும் தோன்றிற்றே பூமி தன்னில் பாவாந்தகாரமும் எவ்வறிவீனமும் நீங்கிடத் தோன்றிடும் எம் நெஞ்சத்தில். 3. வடிவம் வர்ணமும் வான் புவி வண்ணமும் காணுவோமே: உம் சிஷ்டி நோக்கத்தை உம் ஞான ஜோதியை உந்தன் நற்பாதையை காட்டுவீரே. 4. ஜீவ இராசிகள் நீர் நில வாசிகள் எழும்பவே: மகிழ்ந்து மாந்தரும் வணங்கிப் போற்றியும் செல்வோம் எம் வேலைக்கும் எழும்பியே. 5. மன்னாவால் போஷியும் செல் பாதை காட்டிடும் இந்நாள் எல்லாம்: அன்றன்றும் தருவீர் ஆடை ஆகாரம் நீர்: மோட்சம் நடத்துவீர் ஆயுள் எல்லாம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Keezh Vaana Kotiyin Sem Kaanthi Sooriyan Ezhumpitum: Atiyaar Aanmatthin Neethiyin Sooriyan Aarokkiyam Seerudan Ezhumpitum. 2. Raavirul Neengkirrae Kaanthiyum Thonrirrae Poomi Thannil Paavaandhakaaramum Evvariveenamum Neengkidath Thonritum Em Nenjjatthil. 3. Vativam Varnamum Vaan Puvi Vannamum Kaanuvomae: Um Sishti Nokkatthai Um Njaana Jothiyai Undhan Narpaathaiyai Kaattuveerae. 4. Jeeva Iraasigal Neer Nila Vaasigal Ezhumbavae: Makizhnthu Maandharum Vanangkip Porriyum Selvom Em Vaelaikkum Ezhumpiyae. 5. Mannaavaal Poshiyum Sel Paathai Kaattitum Innaal Ellaam: Andranrum Tharuveer Aatai Aakaaram Neer: Motsam Natatthuveer Aayul Ellaam.