பாடல் #8166
எப்போதும் இயேசு நாதா
🔤 Eppothum Yesu Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எப்போதும், இயேசு நாதா, உம்மைப் பின்பற்றுவேன் என்றே தீர்மானமாக நான் வாக்குக் கொடுத்தேன்; நீர் என்னைத் தாங்கிக் காப்பீர் அப்போது அஞ்சிடேன்; முன்சென்று பாதை காட்டும், நான் வழி தவறேன். 2. பூலோக இன்பம், செல்வம் வீண் ஆசாபாசத்தால் என் ஆத்துமா மயங்காமல் தெய்வீக பலத்தால் நீர் துணைநின்று தாங்கும், என் அருள் நாயகா; தீங்கணுகாமல் காரும், மா வல்ல ரட்சகா. 3. ஆங்காரம் சுய சித்தம் தகாத சிந்தையால் மா கலக்கம் உண்டாகி நான் தடுமாறினால், நீர் பேசும், அருள் நாதா, கொந்தளிப்படங்கும்; உம் நேச சத்தம் கேட்டு என் ஆவி மகிழும். 4. பின்பற்றினால் விண் வீட்டில் பேரின்பம் பெறுவீர்”, என்றே உம் சீஷர் நோக்கி நீர் வாக்கு அளித்தீர்; அவ்வருள் வாக்கை நம்பி இவ்வேழை அடியேன், “இதோ, பின்செல்வேன்,” என்று பிரதிக்னை பண்ணினேன். 5. ஓயாமல் பெலன் தாரும் உம்மடிச்சுவட்டில் கால் வைத்து நடந்தேகி நான் யாத்திரை செய்கையில் நீர் வழி காட்டி, என்னை கைதாங்கி வருவீர்; அப்பாலே மோட்ச வீட்டில் பேர் வாழ்வை அருள்வீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Eppothum, Yesu Naathaa, Ummaip Pinbarruvaen Enrae Theermaanamaaga Naan Vaakkuk Kotutthaen; Neer Ennaith Thaangkik Kaappeer Appothu Anjsitaen; Munsenru Paathai Kaattum, Naan Vazhi Thavaraen. 2. Poologa Inbam, Selvam Veen Aasaapaasatthaal En Aatthumaa Mayangkaamal Theyveega Palatthaal Neer Thunaininru Thaangkum, En Arul Naayakaa; Theengganukaamal Kaarum, Maa Valla Ratsakaa. 3. Aangkaaram Suya Sittham Thakaadha Sinthaiyaal Maa Kalakkam Untaaki Naan Thatumaarinaal, Neer Paesum, Arul Naathaa, Kondhalippatangkum; Um Naesa Sattham Kaettu En Aavi Makizhum. 4. Pinbarrinaal Vin Veettil Paerinbam Peruveer”, Enrae Um Seeshar Nokki Neer Vaakku Alittheer; Avvarul Vaakkai Nampi Ivvaezhai Atiyaen, “itho, Pinselvaen,” Enru Pirathiknai Panninaen. 5. Oyaamal Pelan Thaarum Ummatichsuvattil Kaal Vaitthu Natanthaeki Naan Yaatthirai Seykaiyil Neer Vazhi Kaatti, Ennai Kaithaangki Varuveer; Appaalae Motsa Veettil Paer Vaazhvai Arulveer.