பாடல் #8157
காலந்தோறும் தயவாக
🔤 Kaalanthorum Thayavaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. காலந்தோறும் தயவாக தேவரீர் அளித்திடும் பலவித நன்மைக்காக என்ன ஈடுதான் தகும்? எங்கள் வாயும் உள்ளமும் என்றும் உம்மைப் போற்றிடும். 2. மாந்தர் பண்படுத்தி வித்தை பூமியில் விதைக்கிறார் கர்த்தரே அன்பாக அதை முளைத்தோங்கச் செய்கிறார் ஏற்ற காலம் மழையும் பெய்து பூண்டை நனைக்கும். 3. உம்முடைய சித்தத்தாலே காற்று வெயில் வீசுமே கால மழை பனியாலே பயிர்கள் செழிக்குமே உழுவோர் பிரயாசம் நீர் சித்தியாகச் செய்கிறீர். 4. ஆதலால் மகிழ்ந்து நாங்கள் உம்மை அன்பாய்த் துதிப்போம் தாழ்மையோடு உமக்கெங்கள் நெஞ்சத்தையே படைப்போம் தேகம் போஷிக்கின்ற நீர் ஆவியையும் போஷிப்பீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kaalanthorum Thayavaaga Thaevareer Alitthitum Palavidha Nanmaikkaaga Enna Eetuthaan Thakum? Enggal Vaayum Ullamum Enrum Ummaip Porritum. 2. Maandhar Panpatutthi Vitthai Poomiyil Vithaikkiraar Karttharae Anpaaga Athai Mulaitthonggach Seykiraar Aertra Kaalam Mazhaiyum Peythu Poontai Nanaikkum. 3. Ummutaiya Sitthatthaalae Kaarru Veyil Veesumae Kaala Mazhai Paniyaalae Payirkal Sezhikkumae Uzhuvor Pirayaasam Neer Sitthiyaagach Seykireer. 4. Aadhalaal Makizhnthu Naanggal Ummai Anpaayth Thuthippom Thaazhmaiyotu Umakkenggal Nenjjatthaiyae Pataippom Thaegam Poshikkindra Neer Aaviyaiyum Poshippeer.