பாடல் #8150
என் மேய்ப்பர் இயேசு
🔤 En Maeyppar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான், நான் தாழ்ச்சியடையேனே; ஆட்கொண்டோர் சொந்தமான நான் குறையடைகிலேனே. 2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால் என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்; மெய் மன்னாவாம் தம் வார்த்தையால் நல் மேய்ச்சல் எனக்கீவார். 3. நான் பாதை விட்டு ஓடுங்கால் அன்பாகத் தேடிப் பார்ப்பார்; தோள்மீதில் ஏற்றிக் காப்பதால் மகா சந்தோஷங்கொள்வார். 4. சா நிழல் பள்ளத்தாக்கிலே நான் போக நேரிட்டாலும், உன் அன்பின் கோலைப் பற்றவே, அதே என் வழி காட்டும். 5. இவ்வேழைக்கும் ஓர் பந்தியை பகைஞர்க்கெதிர் வைத்தீர்; உம்மாவியால் என் சிரசை தைலாபிஷேகம் செய்வீர். 6. என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம் நிரம்பி வழிந்தோடும்; ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம் நிறைந்து பொங்கிப் பாயும். 7. என் ஜீவ காலம் முற்றிலும் கடாட்சம் பெற்று வாழ்வேன்; கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும் நான் தங்கிப் பூரிப்பாவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Maeyppar Yesu Kiristhuthaan, Naan Thaazhchsiyataiyaenae; Aatkontor Sondhamaana Naan Kuraiyataikilaenae. 2. Jeevaarril Otum Thanneeraal En Aathmath Thaagam Theerppaar; Mey Mannaavaam Tham Vaartthaiyaal Nal Maeycchal Enakkeevaar. 3. Naan Paathai Vittu Otungkaal Anpaagath Thaetip Paarppaar; Tholmeethil Aerrik Kaappathaal Makaa Santhoshangkolvaar. 4. Saa Nizhal Pallatthaakkilae Naan Poga Naerittaalum, Un Anpin Kolaip Partravae, Athae En Vazhi Kaattum. 5. Ivvaezhaikkum Or Panthiyai Pakainjarkkethir Vaittheer; Ummaaviyaal En Sirasai Thailaapishaegam Seyveer. 6. En Aayul Ellaam En Paatthiram Nirampi Vazhinthotum; Jeevaarrin Neeraal Ennullam Nirainthu Pongkip Paayum. 7. En Jeeva Kaalam Murrilum Kataatsam Perru Vaazhvaen; Kartthaavin Veettil Enraikkum Naan Thangkip Poorippaavaen.