பாடல் #8138
தெய்வ ஆட்டுக்குட்டியே
🔤 Theyva Aattukkuttiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வ ஆட்டுக்குட்டியே லோகத்தாரின் மீட்பரே உம்மால் மீட்கப்பட்ட நான் தேவரீர்க்கு அடியான் நீர் என் கோட்டை தஞ்சமாம் ஆர் என் வாழ்வை நீக்கலாம்? உம்மைப் பற்றும் நேசத்தை, உம்மில் வைக்கும் பக்தியை பேயும், கெட்ட லோகமும் மூர்க்கமாய் விரோதிக்கும்; இன்பம் துன்பம் நித்தமே கண்ணியாக நிற்குமே. கர்த்தரே, என் உள்ளத்தில் அருள் தந்தென் மனதில் அந்தகாரம் நீங்கிட, அன்பின் தீபம் ஸ்வாலிக்க, ஆவியின் நல் ஈவையும் பூர்த்தியாக அளியும். எந்த நாழிகையிலே நீர் வந்தாலும் இயேசுவே, உம்மையே நான் சந்திக்க கண்ணால் கண்டு களிக்க, நான் விழித்திருக்கவே நித்தம் ஏவிவாருமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyva Aattukkuttiyae Logatthaarin Meetparae Ummaal Meetkappatta Naan Thaevareerkku Atiyaan Neer En Kottai Thanjjamaam Aar En Vaazhvai Neekkalaam? Ummaip Parrum Naesatthai, Ummil Vaikkum Pakthiyai Paeyum, Ketta Logamum Moorkkamaay Virothikkum; Inbam Thunbam Nitthamae Kanniyaaga Nirkumae. Karttharae, En Ullatthil Arul Thanthen Manathil Andhakaaram Neengkida, Anpin Theebam Svaalikka, Aaviyin Nal Eevaiyum Poortthiyaaga Aliyum. Endha Naazhikaiyilae Neer Vanthaalum Yesuvae, Ummaiyae Naan Santhikka Kannaal Kantu Kalikka, Naan Vizhitthirukkavae Nittham Aevivaarumae.