பாடல் #8135
நீர் திவ்விய வழி
🔤 Neer Thivviya Vazhi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் திவ்விய வழி, இயேசுவே நீர் பாவ நாசர்தாம் பிதாவிடத்தில் சேர்வதும் உமது மூலமாம். நீர் திவ்விய சத்தியம், இயேசுவே உம் வாக்கு ஞானமாம்; என் நெஞ்சில் அதின் ஜோதியால் பிரகாசமும் உண்டாம். நீர் திவ்விய ஜீவன், இயேசுவே வெம் சாவை ஜெயித்தீர்; உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும் சாகாமை ஈகுவீர். நீர் வழி, சத்தியம், ஜீவனும்; அவ்வழி செல்லவும், சத்தியம் பற்றி, ஜீவனை அடையவும் செய்யும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Thivviya Vazhi, Yesuvae Neer Paava Naasarthaam Pithaavidatthil Saervathum Umathu Moolamaam. Neer Thivviya Satthiyam, Yesuvae Um Vaakku Njaanamaam; En Nenjsil Athin Jothiyaal Pirakaasamum Untaam. Neer Thivviya Jeevan, Yesuvae Vem Saavai Jeyittheer; Ummaip Pinbarrum Yaavarkkum Saakaamai Eekuveer. Neer Vazhi, Satthiyam, Jeevanum; Avvazhi Sellavum, Satthiyam Parri, Jeevanai Ataiyavum Seyyum.