பாடல் #8112
வாரும் தெய்வ
🔤 Vaarum Theyva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வாரும், தெய்வ ஆவி வாரும் எங்கள் ஆத்துமத்திலே எங்களுக்குயிரைத் தாரும் வாரும் சுத்த ஆவியே உம்முடன் வெளிச்சமும் சீரும் ஜீவனும் வரும். 2. எங்கள் நெஞ்சிலே நற்புத்தி தெய்வ பயமும் வர அதை நீர் குணப்படுத்தி தப்பு நினைவாகிய யாவையும் அதில் நீரே நீக்கும், தெய்வ ஆவியே. 3. மோட்சத்தின் வழியைக் காட்டி, சகல தடையையும் நீக்கி, எங்களைக் காப்பாற்றி நல்லோராக்கியருளும் கால் இடறிற்றேயாகில் துக்கம் தாரும் மனதில். 4. நாங்கள் தெய்வ மைந்தரென்று நீரே தீங்கு நாளிலும் சாட்சி தந்ததிரைவென்று நெஞ்சைத் தேற்றியருளும் தெய்வ அன்பின் தண்டிப்பு எங்களுக்கு நல்லது. 5. எங்களைப் பிதாவிடத்தில் முழுபக்தியோடேயும் சேரப்பண்ணி, ஆத்துமத்தில் நீரும் கூப்பிட்டேயிரும் அப்போ கேட்டது வரும் நம்பிக்கையும் பெருகும். 6. மனசெங்களில் கலங்கி “ஸ்வாமி, எந்த மட்டுக்கும்” என்று கெஞ்சும் போதிரங்கி அதை ஆற்றிக்கொண்டிரும் நிற்கவும் தரிக்கவும் நீர் சகாயராய் இரும். 7. ஆ, நிலைவரத்துக்கான சத்துவத்தின் ஆவியே பேயின் சூதுக்கெதிரான ஆயுதங்களை நீரே தந்து, நாங்கள் நித்தமும் வெல்லக் கட்டளையிடும் 8. விசுவாசத்தை அவிக்க சத்துருக்கள் பார்க்கவே அதை நீர் அதிகரிக்க செய்யும் தெய்வ ஆவியே நாங்கள் பொய்யைப் பார்க்கிலும் தெய்வ வாக்கை நம்பவும். 9. சாகும் காலம் வந்தால், நாங்கள் நித்திய மகிழ்ச்சியாய் வாழப்போகும் மோட்சவான்கள் என்றப்போ விசேஷமாய் நிச்சயத்தை நெஞ்சிலே தாரும், நல்ல ஆவியே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vaarum, Theyva Aavi Vaarum Enggal Aatthumatthilae Enggalukkuyiraith Thaarum Vaarum Suttha Aaviyae Ummudan Velicchamum Seerum Jeevanum Varum. 2. Enggal Nenjsilae Narputthi Theyva Payamum Vara Athai Neer Kunappatutthi Thappu Ninaivaakiya Yaavaiyum Athil Neerae Neekkum, Theyva Aaviyae. 3. Motsatthin Vazhiyaik Kaatti, Sakala Thataiyaiyum Neekki, Enggalaik Kaappaarri Nalloraakkiyarulum Kaal Idarirraeyaakil Thukkam Thaarum Manathil. 4. Naanggal Theyva Maindharenru Neerae Theengku Naalilum Saatsi Thandhathiraivenru Nenjsaith Thaerriyarulum Theyva Anpin Thantippu Enggalukku Nallathu. 5. Enggalaip Pithaavidatthil Muzhubakthiyotaeyum Saerappanni, Aatthumatthil Neerum Kooppittaeyirum Appo Kaettathu Varum Nampikkaiyum Perukum. 6. Manasenggalil Kalangki “svaami, Endha Mattukkum” Enru Kenjsum Pothirangki Athai Aarrikkontirum Nirkavum Tharikkavum Neer Sakaayaraay Irum. 7. Aa, Nilaivaratthukkaana Satthuvatthin Aaviyae Paeyin Soothukkethiraana Aayudhanggalai Neerae Thanthu, Naanggal Nitthamum Vellak Kattalaiyitum 8. Visuvaasatthai Avikka Satthurukkal Paarkkavae Athai Neer Athigarikka Seyyum Theyva Aaviyae Naanggal Poyyaip Paarkkilum Theyva Vaakkai Nambavum. 9. Saakum Kaalam Vanthaal, Naanggal Nitthiya Makizhchsiyaay Vaazhappokum Motsavaankal Endrappo Visaeshamaay Nicchayatthai Nenjsilae Thaarum, Nalla Aaviyae.