பாடல் #8108
இயேசுவே நீர்
🔤 Yesuvae Neer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே, நீர் என்னை விட்டால் கெட்டழிந்து போவேனே பாவ சோதனைக்குட்பட்டால் மோசத்திற்குள்ளாவேனே இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 2. நேசரால் கைவிடப்பட்டு நொந்து போய்த் தவிக்கையில் ஆபத்தால் நெருக்கப்பட்டு ஏங்கி அங்கலாய்க்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 3. பாதை எங்கும் அந்தகாரம் சூழ்ந்து நிற்கும் வேளையில் கொடிதாம் என் பாவ பாரம் வேதனை கொடுக்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 4. தந்தை தாயும் மக்கள் நண்பர் யாருமின்றி ஏங்கினால் துன்புறுத்தும் தீய வம்பர் கைகள் என் மேல் ஓங்கினால் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 5. பெலன் என்னிலே ஒடுங்கி சாகும் நேரம் கிட்டுகில், சாத்தான் என்னண்டை நெருங்கி மோசம் போகப் பார்க்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae, Neer Ennai Vittaal Kettazhinthu Povaenae Paava Sodhanaikkutpattaal Mosatthirkullaavaenae Yesuvae, Neer Enraikkum Thanjjam Thanthu Ratsiyum. 2. Naesaraal Kaividappattu Nonthu Poyth Thavikkaiyil Aabatthaal Nerukkappattu Aengki Anggalaaykkaiyil Yesuvae, Neer Enraikkum Thanjjam Thanthu Ratsiyum. 3. Paathai Engkum Andhakaaram Soozhnthu Nirkum Vaelaiyil Kotithaam En Paava Paaram Vaedhanai Kotukkaiyil Yesuvae, Neer Enraikkum Thanjjam Thanthu Ratsiyum. 4. Thanthai Thaayum Makkal Nanpar Yaaruminri Aengkinaal Thunpurutthum Theeya Vambar Kaigal En Mael Ongkinaal Yesuvae, Neer Enraikkum Thanjjam Thanthu Ratsiyum. 5. Pelan Ennilae Otungki Saakum Naeram Kittukil, Saatthaan Ennantai Nerungki Mosam Pogap Paarkkaiyil Yesuvae, Neer Enraikkum Thanjjam Thanthu Ratsiyum.