பாடல் #8073
பூர்வ பிரமாணத்தை
🔤 Poorva Piramaanatthai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பூர்வ பிரமாணத்தை அகற்றி, நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார். 2. ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார், பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார். 3. தம் பாலிய மாம்சத்தில் கூர் நோவுணர்கிறார்; தாம் பலியென்று ரத்தத்தில் முத்திரை பெறுகிறார். 4. தெய்வீக பாலனே, இயேசு என்றுமே நீர் மெய் மீட்பராய் இந்நாளிலே சீர் நாமம் ஏற்கிறீர். 5. அநாதி மைந்தனாய், விண் மாட்சிமையில் நீர் பிதா நல்லாவியோடொன்றாய் புகழ்ச்சி பெறுவீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Poorva Piramaanatthai Agarri, Naadhanaar Sirandha Puthu Aerpaattai Paktharkku Eekiraar. 2. Jothiyil Jothiyaam Maasartra Paalanaar, Poologap Paavatthaal Untaam Ninthai Sumakkiraar. 3. Tham Paaliya Maamsatthil Koor Novunarkiraar; Thaam Paliyenru Ratthatthil Mutthirai Perukiraar. 4. Theyveega Paalanae, Yesu Enrumae Neer Mey Meetparaay Innaalilae Seer Naamam Aerkireer. 5. Anaathi Maindhanaay, Vin Maatsimaiyil Neer Pithaa Nallaaviyotonraay Pugazhchsi Peruveer.