பாடல் #8032
மின்னும் வெள்ளங்கி
🔤 Minnum Vellangki
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மின்னும் வெள்ளங்கி பூண்டு மீட்புற்ற கூட்டத்தார் பொன்னகர் செல்லும் பாதையில் பல் கோடியாய்ச் செல்வார் வெம் பாவம் சாவை இவர் வென்றார் போர் ஓய்ந்ததே செம்பொன்னாம் வாசல் திறவும் செல்வார் இவர் உள்ளே. 2. முழங்கும் அல்லேலூயா மண் விண்ணை நிரப்பும் விளங்கும் கோடி வீணைகள் விஜயம் சாற்றிடும், சராசரங்கள் யாவும் சுகிக்கும் நாள் இதே; இராவின் துன்பம் நோவுக்கு ஈடாம் பேரின்பமே. 3. அன்பான நண்பர் கூடி ஆனந்தம் அடைவார்; மாண்பான நேசம் நீங்காதே ஒன்றாக வாழுவார்; கண்ணீர் வடித்த கண்கள் களித்திலங்கிடும் மண்ணில் பிரிந்த உயிர்கள் மீளவும் சேர்ந்திடும் 4. சிறந்த உந்தன் மீட்பை சமீபமாக்குமே தெரிந்து கொள்ளப்பட்டவர் தொகை நிரப்புமே; உரைத்த உந்தன் காட்சி உம்பரில் காட்டுவீர் இறைவா, ஏங்கும் தாசர்க்கு இறங்கி வருவீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Minnum Vellangki Poontu Meetpurtra Koottatthaar Ponnakar Sellum Paathaiyil Pal Kotiyaaych Selvaar Vem Paavam Saavai Ivar Venraar Por Oyndhathae Semponnaam Vaasal Thiravum Selvaar Ivar Ullae. 2. Muzhangkum Allaelooyaa Man Vinnai Nirappum Vilangkum Koti Veenaigal Vijayam Saarritum, Saraasaranggal Yaavum Sukikkum Naal Ithae; Iraavin Thunbam Novukku Eetaam Paerinbamae. 3. Anpaana Nanpar Kooti Aanandham Ataivaar; Maanpaana Naesam Neengkaathae Onraaga Vaazhuvaar; Kanneer Vatittha Kankal Kalitthilangkitum Mannil Pirindha Uyirkal Meelavum Saernthitum 4. Sirandha Undhan Meetpai Sameebamaakkumae Therinthu Kollappattavar Thokai Nirappumae; Uraittha Undhan Kaatsi Umbaril Kaattuveer Iraivaa, Aengkum Thaasarkku Irangki Varuveer.