பாடல் #8025
தேவனே என்னோடு
🔤 Devanae Ennaeாtu
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால் எந்த குறையும் வாழ்விலே ஒரு போதும் இல்லையே தேவனே என்னோடு நீர் இருப்பதால் குறை எது 1. உண்ணும் உணவையே வானம் கொடுக்குமோ - கீழ்க் காற்றில் காடைகள் வந்து மலைபோல் குவியுமோ நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே என் வாழ்விலும் நடக்குமே 2. கடலும் பிளந்திட ஒரு வழி உண்டாகுமோ தரைபோல் நடந்திட தண்ணீர் விலகி நிற்குமோ நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே என் வாழ்விலும் நடக்குமே 3. உம்மையே உறுதியாய் தினம் பற்றிக்கொண்டதால் இந்நாள் வரையுமே நான் உயிரோடிருக்கிறேன் என் தேவை யாவுமே நீர் அறிந்து இருக்கிறீர் அதை செய்தும் முடிக்கிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Ennaeாtu Neer Kooda Iruppathaal Endha Kuraiyum Vaazhvilae Oru Paeாthum Illaiyae Devanae Ennaeாtu Neer Iruppathaal Kurai Ethu 1. Unnum Unavaiyae Vaanam Keாtukkumaeா - Keezhk Kaarril Kaataigal Vanthu Malaipaeாl Kuviyumaeா Neer Kooda Irundhathaal Athu Ellaam Natandhathae En Vaazhvilum Natakkumae 2. Katalum Pilanthida Oru Vazhi Untaakumaeா Tharaipaeாl Natanthida Thanneer Vilaki Nirkumaeா Neer Kooda Irundhathaal Athu Ellaam Natandhathae En Vaazhvilum Natakkumae 3. Ummaiyae Uruthiyaay Thinam Parrikkeாndathaal Innaal Varaiyumae Naan Uyiraeாtirukkiraen En Thaevai Yaavumae Neer Arinthu Irukkireer Athai Seythum Mutikkireer